உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் மகன் செரிப்ரல் பால்சி என்ற பெருமூளை வாத நோயால் உயிரிழந்துள்ளார். அவரது மகன் ஜெயின் நாதெல்லா சிறுவயதிலிருந்தே செரிப்ரல் பால்சி என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 26 வயதில், ஜைன் நாதெல்லா உலகிற்கு விடைபெற்றார். பெருமூளை வாதம் என்றால் என்ன, நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகள், மற்றும் அதன் அறிகுறிகளை ஆறிந்து கொள்ளலாம்.
பெருமூளை வாதம் என்றால் என்ன
பெருமூளை வாதம் என்பது குழந்தைகளில் ஏற்படும் ஒரு நரம்பியல் கோளாறு ஆகும், இது நோயாளியின் உடல் இயக்கத்தை பாதிக்கிறது. இது குழந்தைகளின் மூளை மற்றும் தசைகளை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த நோயில், சில குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே அறிகுறிகளை காண்பிக்கிறார்கள். இதன் காரணமாக, குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளா தான் எழுதிய ஒரு புத்தகத்தில், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மகன் தொடர்பான பல விஷயங்களைக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் ஜைன் நாதெல்லா காலமானார்
செரிப்ரல் பால்சியின் அறிகுறிகள் என்ன?
பெருமூளை வாதம் என்பது மூளை பாதிப்பு தொடர்பான மிகவும் தீவிரமான நோயாகும். குழந்தை பிறக்கும்போது அழவில்லை என்றால், அக்குழந்தை பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது. சில சமயங்களில் குழந்தை பிறக்கும்போதே மஞ்சள் காமாலை நோய்க்கு உள்ளாவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரின் மேற்பார்வையில் சிறப்பு கவனம் தேவை. இது தவிர, பிறந்த பிறகு குழந்தைகளின் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்தால், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வயதானாலும் நடக்க சிரமப்படுகிறார்கள். பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் திறன் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இந்த நோய்க்கான சிகிச்சையில் மருத்துவத்துடன், பிசியோதெரபியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G