ஏலக்காய் பாலின் மோசமான விளைவுகள்! அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியம் கெடும்

Cardamom and Milk Combo: பாலில் ஏலக்காய் சேர்த்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2022, 08:52 AM IST
  • ஏலக்காயை எப்படி சாப்பிடக்கூடாது தெரியுமா?
  • மலச்சிக்கலை ஏற்படுத்துமா ஏலக்காய்
  • வாய் துர்நாற்றத்தை போக்கும் ஏலக்காய் வாயின் சுவையை கெடுக்குமா
ஏலக்காய் பாலின் மோசமான விளைவுகள்! அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியம் கெடும் title=

புதுடெல்லி: ஏலக்காய் வெறும் நறுமணம்கூட்டும் பொருள் என்று மட்டும் வரையறுத்துவிட முடியாது. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட ஏலக்காய் பல நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது ரத்த அழுத்தத்தை சீராக வைத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதிலும் ஏலக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நறுமணமூட்டும் மசாலாவாகவும் பயன்படுத்தப்படும் ஏலக்காயின் கருப்புப் பக்கம் உங்களுக்குத் தெரியுமா? மணத்தைக் கொடுத்து மனதை மயக்கும் ஏலக்காயை பயன்படுத்தி, தேநீர், பால் என சுவையாக பானங்களை அருந்துகிறோம். ஆனால், பாலில் ஏலக்காயை அதிகம் சேர்த்தால், அது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சூடான பாலில் ஏலக்காயை சேர்ப்பது மிகவும் சுவையாக இருக்கும். பால் ஒரு முழுமையான உணவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பாலுக்கு இளைத்தவனில்லை நான் என போட்டியிடும் ஏலக்காய், மசாலாப் பொருட்களின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.

மருத்துவ மற்றும் சுவை குணங்களைக் கொண்டுள்ள ஏலக்காயை பாலில் சேர்த்து குடிப்பது வழக்கம். ஆனால் சுவையை அதிகரிக்க பாலில் அதிக ஏலக்காயை சேர்ப்பதும், தினசரி பயன்பாட்டில் ஏலக்காயை அதிகமாக சேர்ப்பதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.  

ஏலக்காய் பால் வாயின் சுவையை மோசமாக்கும்  
ஏலக்காய் வலுவான சுவை கொண்டது. பாலில் ஏலக்காயை சேர்த்ததும், பாலின் இயல்பான சுவை மாறுகிறது. ஆனால் பாலுடன் சேரும் ஏலக்காய் சிலருக்கு வாயில் வித்தியாசமான மணம் தோன்றலாம். அப்போது, ஏலக்காய் சாப்பிடுவதை சில நாட்களுக்கு நிறுத்துவதன் மூலம் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.  

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

ஏலக்காய் வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்
ஏலக்காய் பாலில் இருக்கும் சில சத்துக்களால், சிலருக்கு வயிறு கலக்கி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். ஆனால் இதுபோன்ற பிரச்சனை வெகு சிலருக்கே ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மலச்சிக்கல் ஏற்படும்
சிலருக்கு ஏலக்காய் சுவையூட்டப்பட்ட பாலை மிகவும் பிடிக்கும், அவர்கள் அதை அதிகமாக குடிப்பார்கள். அதிகப்படியான பால் குடிப்பதால் சிலரின் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஏலக்காய் மலச்சிக்கலைப் போக்க உதவும் என்றாலும், பாலுடன் சேரும்போது, அதன் தன்மை மாறும்.  

மேலும் படிக்க | Cardamom Benefits: ஏலக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா

அதிகப்படியான ஏலக்காயில் பித்தப்பை கற்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தும்
அதிகப்படியான ஏலக்காயை உட்கொள்வது பித்தப்பைக் கற்களை ஏற்படுத்தும் என்றும், பால் மற்றும் பலவற்றில் உள்ள கொழுப்புகள் பித்தப்பை போன்ற பிரச்சனைகளை தீவிரமாக்கும் என்றும் சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனவே, பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள், ஏலக்காய்ப் பாலை அதிகமாகக் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

மருத்துவரை அணுகுவது அவசியம்
ஏலக்காய் தொடர்பாக இந்த கட்டுரையில் கூறப்பட்டது பொதுவான தகவல்கள். ஒவ்வொரு நபரின் உடலிலும் ஏலக்காய் பால் வெவ்வேறு விளைவை ஏற்படுத்தலாம். எனவே, ஏலக்காய்ப் பாலை விரும்பி அருந்துபவர்களுக்கு மேற்கூறிய நோய்கள் வருவது அவசியமில்லை. தேவைப்பட்டால் உங்கள் உடல்நலனை அறிந்த உங்களுடைய மருத்துவரிடம் இதைப் பற்றி ஆலோசனை பெறுவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News