Dont Sleep Together: முத்தத்துக்கு தடா ஒன்றாக தூங்க தடை விதிக்கும் சீனாவின் வினோத விதிகள்

சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்றும் முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 8, 2022, 07:07 AM IST
  • கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளை அதிகரிக்கும் சீனா
  • கடுமையான கோவிட் கட்டுப்பாடுக்கு அவசியம் என்ன
  • கொரோனா நான்ன்காம் அலை எப்போது
Dont Sleep Together: முத்தத்துக்கு தடா ஒன்றாக தூங்க தடை விதிக்கும் சீனாவின் வினோத விதிகள்  title=

முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

இது கொரோனா பரவலின் எதிரொலி என்றும், நாட்டில் கோவிட் வழிகாட்டுதல்களை சீனா கடுமையாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது,  

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், இதுபோன்ற விதிமுறைகள் நாட்டில் கொரோனா பரவலின் தீவிரத்தைக் காட்டுகிறது.

வூஹானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும், அது உலகையே புரட்டி போட்டு அதன் தாக்கங்கள் இன்னும் தொடரும் நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் அச்சத்தை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | இன்னும் கொரோனாவே முடியவில்லை; அதற்குள் பீதியை கிளப்பும் Monkey B வைரஸ்

அச்சம் அதிகரிப்பது ஒருபுறம் என்றால், முதல் முறை கொரோனா பரவல் ஏற்பட்டபோதுகூட இந்த அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்பது கொரோனா பரவலின் வீரியம் தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் நிதி மையமாக விளங்கும் ஷாங்காய் மிகவும் தீவிரமான லாக்டவுன் கட்டுப்பாடுகளின் கீழ் இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் தற்போது மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஊரடங்கிற்கு மத்தியில் நாட்டின் பைத்தியக்காரத்தனமான விதிகள் குறித்து நகரத்தின் குடிமக்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். . வானத்தில் ட்ரோன்கள் மூலம் கோவிட் அறிவிப்புகள் செய்யப்படுவதை வீடியோக்கள் காட்டுகின்றன, 

மேலும் படிக்க | கொரோனா வந்தவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படலாம்

உள்ளூர்வாசிகள் பொருட்கள் இல்லாததை எதிர்த்து தங்கள் பால்கனிகளில் இருந்து பாடுவதைக் காணலாம்.

நாட்டில் ட்ரோன்கள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், குடியிருப்பாளர்கள் பால்கனியில் இருந்து பாடக்கூடாது. அந்தச் செய்தியில், “ஆன்மாவின் சுதந்திர விருப்பத்தைக் கட்டுப்படுத்துங்கள், பாடுவதற்காகக்கூட ஜன்னலைத் திறக்காதீர்கள். இதுகூட தொற்றுநோய் பரவும் அபாயத்தை அதிகரிக்கலாம்” என்று அரசு அறிவிக்கிறது..

அதுமட்டுமின்றி, இணையத்தில் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது, இது சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றாக தூங்கவோ, முத்தமிடவோ அல்லது ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கவோ கூடாது என்று கூறுவதைக் காட்டும் வீடியோ அது.

அந்த வீடியோவில்,“இன்றிரவு முதல், தம்பதிகள் தனித்தனியாக தூங்க வேண்டும், முத்தமிட வேண்டாம், கட்டிப்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை, தனித்தனியாக சாப்பிடுங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஒத்துழைப்புக்கு நன்றி" என சுகாதாரப் பணியாளர்கள் பெரிய மெகாஃபோன்களைப் பயன்படுத்தி அறிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | கொரோனா கவச் பாலிசியை செப்டம்பர் வரை நீட்டித்தது IRDAI

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News