புற்றுநோய் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் கருப்பு பூண்டு பற்றி தெரியுமா?

வெள்ளை பூண்டை விட அதிக நன்மை பயக்கும் கருப்பு பூண்டு தனித்துவமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Last Updated : Apr 7, 2020, 05:29 PM IST
புற்றுநோய் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் கருப்பு பூண்டு பற்றி தெரியுமா? title=

வெள்ளை பூண்டை விட அதிக நன்மை பயக்கும் கருப்பு பூண்டு தனித்துவமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

வெள்ளை பூண்டு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், அதன் பண்புகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள், ஆனால் கருப்பு பூண்டு பற்றி சிலருக்கு மட்டுமே தெரியும், அதைப் பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவு. உங்கள் தகவலுக்கு, கருப்பு பூண்டு என்பது வெள்ளை பூண்டின் ஒரு வடிவம், வெள்ளை பூண்டை நொதிப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. 

இது வெள்ளை பூண்டினை சுவையை விட குறைவான சுவை கொண்டுள்ளது, ஆனால் இது குறைந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது என்று அர்த்தமல்ல. எனவே இன்று நாங்கள் உங்களுக்காக அதன் நன்மைகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டு வந்துள்ளோம், தாமதம் என்ன, அதன் நன்மைகளை தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்...

நொதித்தல் செயல்முறைக்கு உட்படுவதால் கருப்பு பூண்டு தனித்துவமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது, இது அழற்சி எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளது. இது தவிர, பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகளும் இதில் நிறைந்துள்ளன.

கருப்பு பூண்டு உட்கொள்ளல் பல புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது, குறிப்பாக இரத்த புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய். ஒவ்வாமையைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கல்லீரலை எந்தவிதமான சேதங்களிலிருந்தும் பாதுகாக்கவும், மூளை ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களில் உதவுகிறது.

உங்கள் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு முடிவு அளிக்கும் கருப்பு பூண்டு ஒரு வரம் என்றே குறிப்பிடலாம். இப்போது இந்த பண்புகளை அறிந்த பிறகு, அதைப் பயன்படுத்துவதன் மூலமும் ஆரோக்கியமான நன்மைகளைப் பெறலாம், ஆனால் நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், கருப்பு பூண்டு பயன்பாட்டிற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Trending News