தினமும் சீரக நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

எடை இழப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல.ஆரோக்கியமாக சாப்பிடுவதிலிருந்து உடற்பயிற்சி செய்வது வரை, கூடுதல் எடையை குறைக்க ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டும்.உடல் எடையைக் குறைக்க உதவும் பல உணவுப் பொருட்கள் இருந்தாலும், சீரகம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 08:08 AM IST
தினமும் சீரக நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் title=

எடை இழப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல.ஆரோக்கியமாக சாப்பிடுவதிலிருந்து உடற்பயிற்சி செய்வது வரை, கூடுதல் எடையை குறைக்க ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டும்.உடல் எடையைக் குறைக்க உதவும் பல உணவுப் பொருட்கள் இருந்தாலும், சீரகம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

seeragam

சீரகம் 'ஜீரா' என்றும் அழைக்கப்படும். சீரகம் விதைகள் பல்துறை மற்றும் பச்சையாக, வறுத்த அல்லது பொடியாக பயன்படுத்தலாம். கறி, பருப்பு, ரைத்தா மற்றும் சாலட் தயாரிக்கப் பயன்படும், சீரக விதைகள் இந்திய உணவில் பிரிக்க முடியாத பகுதியாகும். ஆனால் ஜீராவின் குறைவான அறியப்பட்ட ஆரோக்கிய நன்மை எடை இழப்பு ஆகும். இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரை குடிப்பது தொப்பை கொழுப்பை கரைக்க உதவும் என்று கூறப்படுகிறது. இக்கட்டுரையில், ஜீரா உடல் எடையை குறைக்க எவ்வாறு உதவுகிறது மற்றும் அதன் பிற ஆரோக்கிய நன்மைகளை பற்றி காணலாம்.

எடை இழப்புக்கான முதல் படிகளில் ஒன்று கலோரி பற்றாக்குறையை உருவாக்குவது ஆகும். நீங்கள் எரிக்கிறதை விட குறைவான கலோரிகளை கொண்ட உணவை சாப்பிடுகிறீர்கள். சீரகம் நீர் ஒரு குறைந்த கலோரி பானம்.1 ஸ்பூன் சீரகத்தில் வெறும் 7 கலோரிகளே உள்ளன. முக்கியமாக கொழுப்புக்களை கரைக்க இந்த சீரக நீர் பெரிதும் பயன்படும். தொடர்ந்து 20 நாட்கள் இந்த சீரக நீர் குடித்து வந்தால் உடல் எடை சீக்கிரமாக குறையும்.

நீங்கள் எடை இழக்கும் வேகத்தில் வளர்சிதை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. மெதுவான வளர்சிதைமாற்றம் கூடுதல் கிலோவை வெளியேற்றுவதைத் தடுக்கிறது. சீரகம் நீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது, இது தொப்பை கொழுப்பை கரைக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தவொரு எடை இழப்பு பயணத்திலும் பசி ஒரு பெரிய தடையாக இருக்கலாம். ஜீரா நீர், குறைந்த கலோரி கொண்ட பானமாக இருந்தாலும், ஒருவரை நீண்ட நேரம் முழுதாக உணர வைக்கிறது மற்றும் பசியின் உணர்வை அடக்குகிறது. மேலும், இது உங்கள் கலோரி உட்கொள்ளலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

மோசமான செரிமானம் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் மற்றும் எடை இழப்பைத் தடுக்கும். சீரக நீர் நுகர்வு கணையத்தை உடலில் பித்தத்தை வெளியிட கட்டாயப்படுத்துகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. ஆரோக்கியமான குடல் இயக்கம் உடல் எடையை குறைப்பதற்கான முதன்மை படியாகும். உடலில் சேர கூடிய கெட்ட கொலஸ்டரோலை அகற்ற ஒரு அற்புத வழிதான் சீரகநீர். ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிக படியான கெட்ட கொலஸ்டரோலை 20 நாட்களிலே இந்த சீரக நீர் கரைத்து விடுமாம். மேலும், நல்ல கொலஸ்டரோலை சீரான அளவில் உடலில் வைத்து கொள்ளும்.

ஜீராவில் தைமோல் உள்ளது, இது கணையத்தில் பித்தத்தை உற்பத்தி செய்ய அறிவுறுத்துகிறது, இது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது. சீரகத்தில் உள்ள ஆல்டிஹைட் என்ற வேதிப்பொருளை முகர்ந்து பார்ப்பது உடலில் உள்ள செரிமான நொதிகளை உயர்த்துகிறது. இது மேம்பட்ட வளர்சிதை மாற்றம், குறைக்கப்பட்ட இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். தினமும் சீரக நீரை குடித்து வந்தால் உடல் பருமன் குறைவதோடு வேறு சில நன்மைகளும் நடக்குமாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவுகிறது.இந்த நீர் இன்சுலின் உற்பத்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது.டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சீரக நீர் மிக சிறந்த மருந்தாகும்.

ALSO READ தினமும் தலைமுடியை அலசுகிறீர்களா! அப்போ கண்டிப்பா இதை படிச்சி பாருங்க!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News