முதுகுவலி பாடாய் படுத்துகிறதா... ‘இந்த’ உணவுகளுக்கு 'NO' சொல்லுங்க!!

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, சமீப காலமாக முதுகுவலி என்பது தலைவலியை போல சர்வசாதாரண பிரச்சனையாகி விட்டது. குறிப்பாக 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கி கொண்டிருந்த வலி தற்போது 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 28, 2023, 11:42 AM IST
  • சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பிரச்சனை அதிகரிக்கிறது.
  • முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்.
  • 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கி கொண்டிருந்த வலி தற்போது 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை.
முதுகுவலி பாடாய் படுத்துகிறதா... ‘இந்த’ உணவுகளுக்கு 'NO' சொல்லுங்க!! title=

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, சமீப காலமாக முதுகுவலி என்பது தலைவலியை போல சர்வசாதாரண பிரச்சனையாகி விட்டது. குறிப்பாக 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கி கொண்டிருந்த வலி தற்போது 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து அலுவலகத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படுகிறது. உணவே மருந்து என்று மக்கள் பலமுறை சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதனால்தான், நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சில உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ஆனால் சில வித பிரச்சனைகளில் , குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே அவற்றிலிருந்து விலகி இருப்பது முக்கியம். முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்

உப்பு அதிகம் உள்ள உணவுகள்

அதிகப்படியான உப்பு உட்கொள்வது, பல நோயாளிகளுக்கு, குறிப்பாக முதுகு வலி அல்லது கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வீக்கம் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளும் ஒஆடாய் படுத்தும். அதனால்தான் மூட்டுவலி உள்ளவர்கள் அதிக அளவு உப்பு கொண்ட உணவைத் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

பதப்படுத்தப்பட்ட உணவு

உங்களுக்கு முதுகு மற்றும் கழுத்து வலி இருந்தால், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக முழு தானியங்களை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளான பீட்சா, மற்றும் மைதா ரொட்டி ஆகியவற்றில் அதிக அளவில் மைதா பயன்படுத்தப்படுகின்றன. இந்த உணவுகள் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து முதுகுவலியை அதிகரிக்கச் செய்யும்.

பசையம் அதிக உள்ள உணவுகள்

பசையம் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு ஆகியவற்றில் உள்ள புரதங்களைக் குறிக்கிறது. பசையம் இல்லாத உணவை உட்கொள்வது அழற்சி அபாயத்தைக் குறைக்கின்றன என்பது மூட்டுவலி அறிகுறிகளை குணப்படுத்துகின்றன.

மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

இனிப்பு உணவு

உங்களுக்கு முதுகுவலி இருந்தால், அதிக சர்க்கரை உள்ள பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். இனிப்பு சாப்பிடுவது வீக்கத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் உங்கள் எடையையும் அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதால், முதுகு மற்றும் கழுத்து வலி பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே தவிர்க்கவும்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி புரதத்தின் வளமான மூலமாகும். ஆனால், உங்களுக்கு முதுகுவலி பிரச்சனை இருந்தால், சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும். neu5gc எனப்படும் ஒரு பொருள் சிவப்பு இறைச்சியில் காணப்படுகிறது. இது வீக்கத்தை ஏற்படுத்தும். இறைச்சி, வெண்ணெய் மற்றும் சீஸ் உள்ளிட்ட நிறைவுற்ற கொழுப்புகளை மிதமாக உட்கொள்ள வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகள் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து வீக்கத்தின் அளவை அதிகரிக்கின்றன.

பால்

முதுகு வலி இருந்தால் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். பால் பொருட்களை சாப்பிடுவதால் வீக்கம் ஏற்படலாம். லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பால் உணவை ஜீரணிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை சாப்பிடுவது வீக்கம் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும். இதனை சமையலில் பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இருக்கும் எண்ணெய்கள் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News