நியூடெல்லி: கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, உலகில் மற்றொரு இன்ஃப்ளூயன்ஸா பரவல் தொடர்பான அச்சங்கள் ஏற்பட்டுள்ளது. கோழி மற்றும் காட்டுப் பறவைகளை பாதிக்கும் இந்த வைரஸால், தற்போது மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை.. இருப்பினும், இந்த பரவுவதற்கான அச்சங்கள் உள்ளன, ஆனால், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை நிறுவப்படவில்லை.
இந்த வைரஸ் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த மாத தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்தார் இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் துணை வகையான H5N1 வைரஸ், பறவைகள் முதல் பாலூட்டிகள் வரை பரவியிருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்த பிறகு, அவர் கவலைகளை பதிவு செய்தார்.
பெரு மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த வைரஸால் ஏற்கனவே இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எக்கச்சக்கமா கொழுப்பு இருக்கா? தினமும் இதை சாப்பிடுங்க.. சட்டுனு குறைக்கலாம்
பறவைகள்/பாலூட்டிகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்
ஏவியன் ஃப்ளூ அல்லது H5N1 பெரும்பாலும் பாலூட்டிகளின் கீழ் சுவாச பாதையை பாதிக்கிறது. இருப்பினும், பரவலான உயிரினங்களில் நோய் பரவுவது மனிதர்களுக்கு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. பறவைக் காய்ச்சல் வழக்குகள், மனிதர்களில் அரிதாக இருந்தாலும், அவை பெரிய இறப்பு விகிதங்களைக் கொண்டிருக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
பறவைக் காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் என்னவாக இருக்கும்? இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், மூக்கில் ஒழுகுதல், தொண்டை வலி, தசை வலி மற்றும் உடல்நலக்குறைவு ஆகியவை பொதுவான அறிகுறிகளில் அடங்கும். பறவைக் காய்ச்சல் வைரஸைத் தவிர்ப்பதற்கு பாதிக்கப்பட்ட பறவை/கோழியுடனான தொடர்பைத் தடுப்பது சிறந்த வழி என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க | Cholesterol: இப்படி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்: இதய நோய் அபாயமும் இருக்காது
பறவை காய்ச்சலுக்கு சிகிச்சை
வைரஸ் தடுப்பு மருந்துகள் ஆரம்ப கட்டத்தில் பறவைக் காய்ச்சலுக்கு வேலை செய்யலாம். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் ஒசெல்டமிவிர் (Tamiflu), ஜானமிவிர் (Relenza), பெராமிவிர் (Rapivab), பாலோக்ஸாவிர் மார்பாக்சில் (Xofluza) ஆகியவை அடங்கும்.
பறவைக்காய்ச்சலுக்கு சிகிச்சை
மனிதர்கள் பறவைக் காய்ச்சலால் மிகவும் அரிதாகவே பாதிக்கப்பட்டிருந்தாலும், காய்ச்சல் வைரஸ் தடுப்பு மருந்துகளுடன் கூடிய விரைவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அறிகுறிகள் இருந்தால், உடனே வைரஸ் தடுப்பு சிகிச்சை சிறப்பாக செயல்படும். இது தொடர்பான அறிகுறிகளை ஏற்பட்ட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை 7 நாட்களில் குறைக்க வேண்டுமா? இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ