Twindemic: ஒமிக்ரானுக்கு மத்தியில் ட்விண்டமிக் அச்சுறுத்தலும் வந்தால் என்ன செய்வது?

கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், 'ட்விண்டமிக்' குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 'ட்விண்டெமிக்' என்றால் என்ன?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 28, 2022, 08:43 AM IST
  • கொரோனா பரவலுக்கு மத்தியில் 'ட்விண்டமிக்' எச்சரிக்கை
  • ட்விண்டமிக் என்றால் என்ன?
  • கொரோனாவின் அச்சத்தை அதிகரிக்கும் நிபுணர்களின் எச்சரிக்கை
Twindemic: ஒமிக்ரானுக்கு மத்தியில் ட்விண்டமிக் அச்சுறுத்தலும் வந்தால் என்ன செய்வது? title=

Twindemic: உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் 'ட்விண்டமிக்' பற்றிய விவாதங்கள் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளன. 

இது குறித்து நிபுணர்களும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டமிக், எண்டமிக் என்ற வார்த்தைகள், கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு அதிகமாக புழங்கும் நிலையில், தற்போது டிவிண்டமிக் என்ற வார்த்தையும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

டிவிண்டமிக் என்றால் என்ன? இதன் அபாயம் என்ன? ஏன் நிபுணர்கள் இது குறித்து எச்சரிக்கை விடுக்கீன்றனர் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

ALSO READ | Omciron முக்கிய அறிகுறி: ஆண்கள், பெண்களின் பாதிப்பு வெவ்வேறு மாறுபாடு மாறுகிறதா?

காய்ச்சல்  
பொதுவாக குளிர்காலத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும். இதற்கிடையில், கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நிபுணர்கள் அனைவருக்கும் 'ட்வைண்டமிக்' குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 'ட்வைண்டமிக்' (Twindemic) என்பது காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் இணைந்து பாதிப்பை ஏற்படுத்துவதை குறிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் சுகாதார அமைப்புகள் ஸ்தம்பித்துள்ளதால் நிபுணர்கள் இது குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

health

'ட்விண்டமிக்' என்றால் என்ன?

காய்ச்சல் மற்றும் நாவல் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டும் இணைந்து ஒருவரை தாக்கும்போது 'ட்விண்டமிக்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ்கள் அவற்றின் நோய்க்கிருமி உருவாக்கத்தில் வேறுபடுகின்றன என்றாலும், காய்ச்சல் மற்றும் கோவிட்-19 இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால், உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

பொதுவாக காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ், ஆண்டுதோறும் சுமார் 650,000 பேரைக் கொல்கிறது, உலகளாவிய மதிப்பீட்டின்படி. கடந்த ஆண்டு இறுதியில், ஐரோப்பாவில் சராசரியை விட அதிகமானவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

ALSO READ | ஓமிக்ரான் வகை கொரோனா உடலில் எத்தனை நேரம் இருக்கும்?

தற்போது பல நாடுகளில் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகிய இரண்டின் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதை'டுவிண்டமிக்' என்று குறிப்பிடுகின்றனர்.

டிசம்பரில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் கூறுகிறது. 2021 ஆம் ஆண்டின் கடைசி வாரத்தில் குறைந்தது 43 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் தரவு கூறுகிறது. 

பாரிஸ் உட்பட பிரான்சின் மூன்று பிராந்தியங்கள் காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்வதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ALSO READ | கொரோனாவின் அடுத்த திரிபு ஒமிக்ரானை விட வேகமாக பரவும்: WHO எச்சரிக்கை

ஐரோப்பா ஏற்கனவே கோவிட்-19 இன் ஓமிக்ரான் மாறுபாட்டை எதிர்த்துப் போராடும் நேரத்தில் Twindemic தொடர்பான செய்திகள் வருவது கவலையளிக்கிறது.

உங்களுக்கு Twindemic இருந்தால் என்ன நடக்கும்?
காய்ச்சலுக்கும் கோவிட்-19 வைரஸுக்கும் இடையில் வேறுபாடு காண்பது மருத்துவர்களுக்கு சவாலானது. தொற்றுநோயைத் தவிர்க்க சமூக விலகலைப் பின்பற்றுவது இன்றியமையாதது. முகக் கவசங்களை அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

ALSO READ | Food vs Omicron: ஓமிக்ரானை ஓட ஓட விரட்டும் உணவுகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News