எலுமிச்சை விதைகளை தூக்கி எறியாதீங்க: இவற்றின் நன்மைகள் சொல்லி மாளாது

Health Benefits of Lemon Seeds: எலுமிச்சை விதைகளில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2022, 05:30 PM IST
  • இந்திய சமையலில் எலுமிச்சைக்கு முக்கிய இடம் உண்டு.
  • எலுமிச்சை விதைகளை பேஸ்ட் செய்து வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குணமாகும்.
  • விரல் தொற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், எலுமிச்சை விதை பேஸ்ட்டை தடவி பயனடையலாம்.
எலுமிச்சை விதைகளை தூக்கி எறியாதீங்க: இவற்றின் நன்மைகள் சொல்லி மாளாது title=

இந்திய சமையலில் எலுமிச்சைக்கு முக்கிய இடம் உண்டு. எலுமிச்சை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி உடல் ஆரோக்கியம் மற்றும் அழகுக்கும் பல வழிகளில் உதவுகிறது. நாம் பெரும்பாலும், எலுமிச்சை சாறு மற்றும் அதன் தோலைக்கூட பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் விதைகளை தூக்கி எறிந்துவிடுகிறோம். 

எலுமிச்சை விதைகள் தொடர்பான பல கட்டுக்கதைகளும் உள்ளன. சிலர் எலுமிச்சை விதைகளை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆனால், சிலரோ, எலுமிச்சை விதைகள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் கூறுகிறார்கள். 

எலுமிச்சை சாறுடன் நீங்கள் ஒன்றிரண்டு எலுமிச்சை விதைகளை விழுங்கிவிட்டாலும் பிரச்சனை இல்லை, இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது. எலுமிச்சை விதைகளில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.  உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு எலுமிச்சை விதை எந்த வகையில் எல்லாம் உதவியாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

வலி நிவாரணம்:

எலுமிச்சை விதைகளில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. வலியைக் குறைக்கும் பல்வேறு மருந்துகளின் முக்கிய கூறுகளில் இதுவும் ஒன்றாகும். உங்கள் உடலில் வலி இருந்தால், அந்த நேரத்தில் நீங்கள் எலுமிச்சை விதைகளிலிருந்து பயனடையலாம். எலுமிச்சை விதைகளை பேஸ்ட் செய்து வலி உள்ள இடத்தில் தடவவும். இதனால் உங்கள் வலி விரைவில் குணமாகும். 

நூல்புழு பிரச்சனையை குறைக்கிறது:

நூல்புழுக்கள் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்த பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனினும், இவை பெரும்பாலும் குழந்தைகளிடம் அதிகமாக காணப்படுகிறது. இவை நூலைப்போல இருக்கும், திறந்த மற்றும் மலக்குடல் பகுதியைப் பாதிக்கும். 

நூல்புழுவால் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற, ஒரு கைப்பிடி எலுமிச்சை விதைகளை நசுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த நீரைக் கொண்டு, நீங்கள் அந்த பகுதியை சுத்தம் செய்யலாம். நீங்கள் விரும்பினால், இந்த தண்ணீரை உட்கொள்ளலாம். ஏனெனில் இது நச்சுத்தன்மையை அகற்றும் பண்புகள் உள்ளன. 

மேலும் படிக்க | வெப்ப அலையில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகள் 

சரும பாதுகாப்பு:

எலுமிச்சை சாறு, தோல் மற்றும் விதைகள் மூன்றும் நம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எலுமிச்சை விதைகளுக்கு சருமத்தை நீரோட்டமாக வைத்திருக்கும் தன்மை உண்டு. இதனுடன் எலுமிச்சை சாறு போல, எலுமிச்சை விதையிலும் வைட்டமின் சி உள்ளது. இதை சருமத்தை ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தலாம். எலுமிச்சை விதைகளை நசுக்கி தேனில் கலக்கவும். இந்த வழியில் செய்யப்பட்ட ஃபேஸ் ஸ்க்ரப் உங்கள் முகத்துக்கு பொலிவை அளிக்கும். இதை உடல் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம்.

விரல் பூஞ்சை சிகிச்சை:

நீங்கள் ஏதேனும் விரல் தொற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், எலுமிச்சை விதை பேஸ்ட்டை தடவி பயனடையலாம். நல்ல பலன்களைப் பெற, இந்த பேஸ்டில் இரண்டு சொட்டு தேயிலை மர (டீ ட்ரி) எசன்ஷியல் ஆயிலையும் கலக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உடல் எடை குறையணுமா: இந்த சூப் குடிங்க, சூப்பரா குறையும் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News