Bottle Gourd Juice: சுரைக்காய் ஜூஸ் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன?

Lauki Juice Benefits: சுரைக்காயில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 24, 2023, 10:41 AM IST
  • சுரைக்காயில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
  • ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது.
  • கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.
Bottle Gourd Juice: சுரைக்காய் ஜூஸ் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? title=

Bottle Gourd Juice Recipe: சுரைக்காய் எப்போதும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த காய்கறியில் நீர் (சுமார் 92%) மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. கோடைகாலத்தில் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்கிறது. ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த சுரைக்காய் சாறு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. சுரைக்காய் கூட்டு, சுரைக்காய் குழம்பு வைத்து சாப்பிடலாம். ஆனால் இதை ஜூஸ் போல அருந்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதைக் குறித்து பார்ப்போம். 

சுரைக்காயில் இருக்கும் சத்துக்கள்
சுரைக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்பு, போலேட், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய பல சத்துக்கள் நிறைந்தது. 

சுரைக்காய் ஜூஸ் நன்மைகள்
சுரைக்காய் ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நல்லது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் செரிமானத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சுரைக்காய் ஜூஸ் உடலில் இருந்து நச்சுகளை நீக்குவதால் சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது. இளம் வயதிக் முடி நரைப்பதைக் கூட தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீர்ச்சத்து மிகுந்த சுரைக்காய் சாப்பிடுவதன் மூலமாக வயிறு ஆரோக்கியமாக இருக்கும். 

மேலும் படிக்கவும்: நீரிழிவு முதல் கீல்வாதம் வரை... முருங்கை இலை கஷாயம் செய்யும் மாயங்கள்!

சுரைக்காய் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்
- மீடியம் அளவுள்ள தோலுரித்து, விதை நீக்கி, நறுக்கிய இரண்டு சுரைக்காய்
- 1 தேக்கரண்டி சீரக தூள்
- 1 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
- எலுமிச்சை சாறு 2 முதல் 3 தேக்கரண்டி
- 15 முதல் 20 புதினா இலைகள் (சிறிதாக நறுக்கி கொள்ளவும்)
- சிறிய அளவிலான ஒரு துண்டு இஞ்சி
- தேவையான அளவு தண்ணீர்
- உப்பு, ஐஸ் கட்டிகள் (உங்கள் விருப்பப்படி, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் தவிர்க்கவும்)

மேலும் படிக்கவும்: காலை எழுந்தவுடன் முதலில் தண்ணி குடிங்க: நம்ப முடியாத நன்மைகள் நடக்கும்

சுரைக்காய் ஜூஸ் செய்வது எப்படி? 
- சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட சுரைக்காய் சுரைக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். 
- புதினா இலைகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
- வெட்டப்பட்ட சுரைக்காய், இஞ்சி, புதினா இலைகள், மிளகு, சீரகம் அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும்.
- அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3-4 நிமிடங்கள் கலக்கவும்.
- அதன் பிறகு நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
- அடுத்து எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். 
- இந்த சாற்றை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி தினமும் அதிகாலையில் குடிக்கவும்.

மேலும் படிக்கவும்: அசோக மரத்தின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News