புதுடெல்லி: பேரீச்சம்பழம் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும், சில சூழ்நிலைகளில் பேரீச்சம்பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதொடு, அதிகப்படியான பேரீச்சம்பழங்களை உட்கொள்வதும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு நாளைக்கு 5 பேரிச்சம்பழங்களுக்கு மேல் சாப்பிட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றன.
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி6 மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பாலுடன் (Milk) சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். மேலும், இதில் உள்ள நார்ச்சத்து மூளை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் ஒரு நாளைக்கு 5 பேரிச்சம்பழங்களுக்கு மேல் சாப்பிடுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
ALSO READ | பிசைந்து வைத்த ரொட்டி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா..!!!
வயிற்று பிரச்சினைகள்
சந்தையில் கிடைக்கும் பேரீச்சம்பழங்களில், அதனை நீண்ட நாள் கெட்டுக் போகாமல் இருக்க சல்பைட் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சல்பைட் என்பது ஒரு வேதியியல் கலவையாகும். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தாக்காமல் பாதுகாக்கிறது என்றாலும், உங்களுக்கு சல்பைடு ஒவ்வாமை இருந்தால், பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் வயிற்று வலி, வாயு பிரச்சனை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பேரீச்சம்பழத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது. அதனால், பல சூழ்நிலைகளில் அதன் அதிகப்படியான அளவு உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
ஹைபர்கேமியா
பேரிச்சம்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதை அதிக அளவில் சாப்பிடுவதால், உடலில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிக்கிறது. இந்த நிலை ஹைபர்கேமியா என்று அழைக்கப்படுகிறது. இது குமட்டல், மயக்கம், தசை பலவீனம்-கூச்ச உணர்வு மற்றும் வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
ALSO READ | இஞ்சியின் தோலை நீக்கி விட்டு பயன்படுத்துகிறீர்களா; இந்த செய்தி உங்களுக்கு தான்..!!!
ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டாம்
பேரிச்சம்பழம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் அந்த பிரச்சனை அதிகரிக்கலாம். ஆஸ்துமா நோயாளிகள் பேரீச்சம்பழம் உட்கொள்ளும் போது எச்சரிக்கையும் இருக்க வேண்டும்.
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம்
பேரிச்சம்பழம் இயற்கையாகவே இனிப்பானது. அதனால், அதனை அதிகமாக உட்கொண்டால், அது நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | உயரத்தை அதிகரிக்க வேண்டுமா; இதோ நான்கு எளிய வழிகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR