அழகை ரசிக்கறவங்க பாதாமை வேண்டான்னு சொல்வாங்களா? ஆரோக்கியத்திற்கும் பாதாம்

National Almond Day 2023: அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான உணவுப்பொருள் பாதாம்... உண்மையில், ஆயுர்வேதத்திலும் பாதாம் சிறந்ததொரு உணவு மற்றும் மருந்தாக கருதப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2023, 10:58 AM IST
  • அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் எது தேவை?
  • ஊட்டச்சத்துகள் கொண்ட பாதாமின் நன்மைகள்
  • பிப்ரவரி 16 தேசிய பாதாம் நாள்
அழகை ரசிக்கறவங்க பாதாமை வேண்டான்னு சொல்வாங்களா? ஆரோக்கியத்திற்கும் பாதாம் title=

உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான உணவுப்பொருள் பாதாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். உண்மையில், ஆயுர்வேதத்திலும் பாதாம் சிறந்ததொரு உணவு மற்றும் மருந்தாக கருதப்படுகிறது. வாதம், பித்தம் மற்றும் கபம்  ஆகியவற்றை சமநிலையில் பராமரிக்க பாதாம் உதவுகிறது. பாதாம் பருப்பின் நன்மைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.  பாதாமை ஊறவைத்து தோல் நீக்கியோ அல்லது அப்படியேயோ சாப்பிடலாம்.

பாதம் பருப்பின் சக்தியை பெற்றால், ஆரோக்கியம் நலமாக இருக்கும். எனவே தினமும் சாப்பிட வேண்டும். அதிலும், பாதாம் பருப்புகளை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம்  உடல் பலவீனம், நீரிழிவு நோய் என சில சிக்கல்களைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. 

நோய்களில் இருந்து பாதுகாப்பு

உடல் பருமன், ப்ரீடியாபயாட்டீஸ் மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற மருத்துவக் கோளாறுகளுடன் தொடர்புடைய பல நோய்களில் இருந்து பாதாம் நமது உடலை பாதுகாக்கிறது. தினமும் பாதாம் பருப்பை உட்கொள்வது, உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கும், சருமத்தின் நிறம் மங்காமலும், அதன் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பாதாம் உதவுகிறது.

சருமத்திற்கு சிறந்தது பாதாம்

சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றும் பாதாம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் உறுதியளிக்கிறது, பாதாம் பருப்பை தினசை 4 என்ற வீதத்தில் சாப்பிட்டு வந்தால், அழகு மேம்படும். இளநரை மற்றும் முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகள் தடுக்கப்படும்.  

மேலும் படிக்க | Cholesterol: கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த சட்னியை சாப்பிடுங்கள்..! தமனிகள் சுத்தமாகும் 

உலக பாதாம் நாள்

பாதாம் பருப்பின் அவசியத்தையும் அதை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிப்ரவரி 16ம் நாள் உலக பாதாம் நாளாக அனுசரிக்கப்படுகிறது. 

பண்டைய காலந்தொட்டே பாதாம் அனைவராலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வணிகத்திற்காக கடல் கடந்து செல்லும் நீண்ட பயணத்தில்,\பாதாம் பருப்பு பயன்பாடு அதிகமாக இருந்துள்ளது.   

பாதாமின் வரலாறு

பல்வேறு சிறப்புமிக்க உடல் நலப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பாதாமின் தினத்தைக் கொண்டாடும் வகையில், அதனை தினசரி உணவில் பயன்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

மேலும் படிக்க | பீன்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News