ஜனவரி 2 முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை, ஆந்திர மாநிலம் உட்பட நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட நிலையில், வரும் 2ம் தேதி நாடு முழுவதும் ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 31, 2020, 05:01 PM IST
  • பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் தடுப்பூசி போடும் நடவடிக்கைக்கான ஒத்திகை நடைபெற்றது.
  • தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கையை 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • கடினமான மலைப்பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளிலும், ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஜனவரி 2 முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு title=

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இன்று குஜராத்தில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டி நடத்திய உரையில், தடுப்பூசி போடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன என குறிப்பிட்டார். தடுப்பூசி போடும் நடவடிக்கையில், குழப்பம் ஏதும் ஏற்படாமல் இருக்க, பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்றது. 

இந்நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு தயார் நிலையில் உள்ளது என்பதை மறுஆய்வு செய்ய மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனையில் பங்கேற்ற. மாநில சுகாராத் துறை செயலாளர்கள், தடுப்பூசி (Corona Vaccine) போடும் பணிகள் தொடர்பாக மாநில அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்த தகவல்களை அளித்தனர். கூட்டத்தில் தடுப்பூசி ஒத்திகை குறித்த ஆலோசனையும் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, பின்னர் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 2ம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகையை நடத்த, அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும்  ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும்மத்திய அரசு கூறி உள்ளது.  ஒத்திகை நடவடிக்கையை 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் கடினமான மலைப்பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளிலும், இந்த ஒத்திகை நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன.

தமிழகத்தை (Tamil Nadu) பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறி உள்ளார்.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control Organisation - CDSCO) கீழ் உள்ள  நிபுணர் ஜனவரி 1 ம் தேதி கூடி மூன்று மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் அவசர-பயன்பாட்டிற்கான அங்கீகார விண்ணப்பத்தை பரிசீலிக்கும் . ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தயாரிக்கும்  ஃபைசர் (Pfizer), சீரம் நிறுவனம் (Serum Institute of India), மற்றும் கோவேக்ஸின் (Covaxin)தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் (Bharat Biotech) ஆகியவை இந்த மூன்றும் மருந்து நிறுவனஙக்ள் ஆகும்.

ALSO READ | ஆரோக்கியமே செல்வம் என்பதை 2020 நமக்கு உணர்த்தியுள்ளது: பிரதமர் மோடி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News