உடல் எடையைக் குறைக்க... இந்த 7 உணவுகளையும் சாப்பிடுங்கள்...

உடல் எடையைக் குறைக்க உதவும் ஏழு எதிர்மறை கலோரி உணவுப் பொருட்கள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் இங்கு காண்போம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 2, 2022, 06:05 PM IST
  • அதிகம் புரோதம் உள்ள உணவுகள் எதிர்மறை கலோரி உடையது.
  • கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகளும் எதிர்மறை கலோரி உடையதுதான்.
  • இங்கு அன்றாடம் சாப்பிடக்கூடிய 7 எதிர்மறை கலோரி உணவுப் பொருள்கள் பட்டியிடலப்பட்டுள்ளன.
உடல் எடையைக் குறைக்க... இந்த 7 உணவுகளையும் சாப்பிடுங்கள்... title=

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு முதல் அனைத்தையும் முயற்சி செய்வார்கள். மருத்துவர்கள் முதல் பலரின் ஆலோசனைகளை பின்பற்றி வருவார்கள். இதனால், அவர்களுக்கு விடிவுக்காலம் பிறக்கிறதோ இல்லை, குழப்பமடைவோர்தான் அதிகம். 

ஆனால், குழப்பமே இல்லாமல், நம் அன்றாட சாப்பாட்டில் சில எளிமையான உணவுகளை சேர்த்துக்கொண்டால், அவை எதிர்மறை கலோரி உணவுகளாக இருக்கும்பட்சத்தில் உங்கள் உடல் குறைப்பு பயணத்தில் மிகுந்த பயனை அளிக்கும். அந்த வகையில், பின்வரும் எதிர்மறை கலோரி கொண்ட 7 உணவுப் பொருள்களையும், அதன் பயன்களையும் கண்டு பயனடையுங்கள். 

மேலும் படிக்க | கஞ்சி சாப்பிட்டால் சர்க்கரை நோய்யாளிகளின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

1. பெரீஸ்

வழக்கமாக, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற வண்ணமயமான பெர்ரிகளில் அரை கப், 32 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக புரதம் இதில் இருப்பதால், அவை எதிர்மறை கலோரி உணவுகள் என்று வழக்கமாக குறிப்பிடப்படுகின்றன. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பல நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்க உதவுகிறது. 

2. வெள்ளரிக்காய்

100 கிராம் வெள்ளரியில் 15 கலோரிகள் உள்ளன. அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்களுடன் உள்ள வெள்ளரி, தாகத்தைத் தணிப்பதற்கு ஏற்றது. வெள்ளரிகள் உடலில் நீரை அதிகப்படுத்துவதற்கு சிறந்ததாகும். வெள்ளரி தாகத்தைத் தணிப்பது மட்டுமின்றி, நீரிழிவு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும். இதில், நார்சத்தும் இருக்கிறது.

broccoli

3. கேரட்

100 கிராம் கேரட்டில் சுமார் 41 கலோரிகள் உள்ளன. மேலும், அவற்றில் கொழுப்புகள் குறைவாக உள்ளன. உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் கையாள்வதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேரட் உணவு நார்ச்சத்துக்கான வலுவான ஆதாரம். பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவையும் கேரட்டில் அதிகமாக உள்ளது.

4. ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் 100 கிராமுக்கு 34 கலோரிகள் உள்ளன. வைட்டமின் ஏ நிறைந்த ஆதாரமாக உள்ளது. இது பார்வையை மேம்படுத்துகிறது. இதிலுள்ள இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் ரத்த சோகையைத் தவிர்க்க உதவுகிறது. மேலும் நல்ல எலும்பு உருவாக்கத்திற்கு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே அதிகமாக தேவைப்படுகின்றன. மூளையின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு அவசியமான ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA), ப்ரோக்கோலியில் ஏராளமாக உள்ளது.

5. மலைக்கீரை

100 கிராம் கீரையில் 15 கலோரிகள் உள்ளன. இதில், கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. மேலும், இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. கீரையின் உயர் நார்ச்சத்து எடை இழப்புக்கு உதவுவதோடு, கண் மற்றும் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதிலும் செயலாற்றுகிறது.

Lettuce

6. ஆப்பிள்

ஆப்பிளில் 100 கிராமுக்கு 50 கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நீங்கள் உங்கள் மதிய உணவாக எளிதாக எடுத்துச்செல்லலாம். ஆப்பிள்களில் நிறைய பெக்டின்கள் உள்ளன. இந்த நார்ச்சத்து எடை குறைப்பிற்கு உதவுகிறது. இது படிப்படியாக சர்க்கரையை வெளியிடுகிறது. இதன்மூலம், உடலின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலையும் போக்க உதவுகிறது.

7. தக்காளி

வெள்ளரிக்காய் போன்று தக்காளியும் இந்திய குடும்பங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 100 கிராமுக்கு இந்த தக்காளியில் 19 கலோரிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. கூடுதலாக லைகோபீனும் உள்ளது. இது புற ஊதா கதிர்களிடம் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது. தக்காளி, கொளஸ்ட்ராலை குறைக்க கூடுதலாக பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இந்த மேஜிக் ஜூஸ் குடிங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News