உயர் இரத்த அழுத்தத்தின் 6 அறிகுறிகள்: நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்

உயர் ரத்த அழுத்தம் என்பது மற்ற பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதால், அது குறித்து ஒவ்வொருவரும் விழிப்பாக இருப்பது அவசியம். அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 15, 2023, 04:52 PM IST
  • உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள்
  • அலட்சியமாக இருக்காதீர்கள்
  • மருத்துவரின் ஆலோசனை அவசியம்
உயர் இரத்த அழுத்தத்தின் 6 அறிகுறிகள்: நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் title=

உயர் ரத்த அழுத்த அறிகுறிகள்;

மூச்சு திணறல்

மூச்சுத் திணறல் நுரையீரல் அல்லது இதய பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அதன் குறிப்பிட்ட காரணம் சில நேரங்களில் உயர் ரத்த அழுத்தம் தொடர்புடையதாகவும் இருக்கும்.

கால்களின் வியர்வை

கால்களில் வியர்வை ஏற்படுவது உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். பலர் வியர்வையால் சிரமங்களை எதிர்கொண்டாலும், நீரிழிவு நோயாளிகள் மிகவும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 

மேலும் படிக்க | ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க... ‘இந்த’ மேஜிக் பானங்கள் நிச்சயம் உதவும்!

தூங்குவதில் சிரமம்

தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் தூக்கத்தின்போது மீண்டும் மீண்டும் நின்று சுவாசிக்கத் தொடங்குவது என்பது ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

தலைவலி

தலைவலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் இடையே உள்ள உறவு மக்களுக்கு கவலை அளிக்கிறது. இருப்பினும், சிலர் உயர் இரத்த அழுத்தத்தின் மற்ற அறிகுறிகளைக் காட்டும்போது தலைவலி இருப்பதாக கூறுகின்றனர். எனவே, தலைவலியை அனுபவிக்கும் ஒருவர் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.

சோர்வு

உயர் இரத்த அழுத்தம் நேரடியாக சோர்வு மற்றும் பலவீனத்துடன் தொடர்புடையது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அடிக்கடி சோர்வு இருப்பதுபோல் உணர்ந்தால் மருத்துவரிடம் சென்று ரத்த சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | மன அழுத்தம் முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் ஜாதிக்காய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News