கொய்யா பழத்தை வறுத்து சாப்பிட்டால், 5 பிரச்சனைகள் வராது...!

Guava | கொய்யா பழத்தை குளிர்காலத்தில் நீங்கள் வறுத்து சாப்பிடும்போது கொலஸ்ட்ரால் முதல் இருமல் சளி வரையில் இந்த 5 பிரச்சனைகள் வரவே வராது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 6, 2024, 02:14 PM IST
  • கொய்யா பழத்தை சாப்பிடும் முறை
  • வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை
  • சளி முதல் இருமல் வரை எந்த பிரச்சனையும் வராது
கொய்யா பழத்தை வறுத்து சாப்பிட்டால், 5 பிரச்சனைகள் வராது...! title=

Guava Health Benefits Tamil | மழை குளிர்காலம் வந்துவிட்டால் கொய்யா பழம் விற்பனையும் அதிகரித்துவிடும். ஏனென்றால் அதில் அதிகம் நார்ச்சத்து இருக்கிறது. குளிர் காலத்தில் பொதுவாக நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், பருவ கால பழமாக பார்க்கப்படும் இதனை தேவையான அளவில் தினமும் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து மட்டுமல்லாது வைட்டமின் சி நிறைந்த பழம். இது குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரஞ்சு பழத்தை விட கொய்யாவில் அதிக வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. உடலை ஆரோக்கியமாக்குகிறது.

குளிர்காலத்தில் கொய்யாவை எப்படி சாப்பிட வேண்டும் என்ற முறையும் இருக்கிறது. அதன்படி கொய்யா சாப்பிடும்போது சளி, இருமல் மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. அதாவது, குறைந்த தீயில் வறுக்க வேண்டும். இது கொய்யாவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, அதன் சத்துக்களை உடலில் விரைவாக உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. வறுத்த கொய்யாவை சாப்பிடுவதால் வயிறு லேசாக இருப்பதுடன் இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை வேகமாய் குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி உட்கொண்டால் போதும்

கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

குளிர்காலத்தில் கொய்யா சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது சளி, இருமல் நீங்குவது மட்டுமின்றி செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைக்கிறது. கொய்யாவில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது, ஆனால் அதிகப்படியான நுகர்வு வீக்கம் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமானது.

இருமல் மற்றும் சளி : குளிர்காலத்தில் கொய்யாவை சாப்பிடுவது இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதனை வறுத்து சாப்பிட்டால் சுவாச மண்டலம் வலுவடையும்.

எடை இழப்பு: கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது எடை குறைக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

கொலஸ்ட்ரால் மற்றும் பிபி பிரச்சனை: கொய்யாவில் உள்ள பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

நீரிழிவு நோய் : கொய்யாவின் குறைந்த கிளைசெமிக் குறியீடு, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் செய்கிறது.

புற்றுநோய் : இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, இது புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கிறது.

மேலும் படிக்க | இதயம் தொடர்பான நோய்க்கு புதிய கண்டுபிடிப்பு! இனி மாரடைப்பை தடுக்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News