கிரிக்கெட் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாயன்க் அகர்வால் :நேர்காணல்

கர்நாடக மாநில கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் முக்கிய பேட்ஸ்மேனான மயாங்க் அகர்வால் திகழ்கிறார். ZEE நியூஸ் ஹிந்தி ஆன்லைன் வலைவாசலுக்கு போன் மூலம் நேர்காணலில் உரையாடினார். அதைப்பற்றி பார்ப்போம்!!

Last Updated : Mar 16, 2018, 09:26 PM IST
கிரிக்கெட் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாயன்க் அகர்வால் :நேர்காணல் title=

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மாயன்க் அகர்வால் (வயது 27), தனது மாநில கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டின் ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவித்துள்ளார். மயாங்க் அகர்வால் அண்மையில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஹைதராபாத்க்கு எதிராக 140 ரன்களும், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 81 ரன்களும், இறுதிப் போட்டியில் சவுராஷ்ட்ரா அணிக்கு எதிராக 90 ரன்கள் எடுத்து கர்நாடக அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஒரே ஆண்டில் ரஞ்சிக் கோப்பையில் 2,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்லி உள்ளிட்ட பல புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களின் சாதனையை முறியடித்துள்ளார். 

கடந்த ஐ.பி.எல். சீசனில் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார் மயாங்க் அகர்வால். ஐ.பி.எல் 11 சீசனில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச போட்டியில் விளையாட காத்திருக்கும் வளரும் நட்சத்திரமான மாயன்க் அகர்வால் அவர்கள், ZEE நியூஸ் ஹிந்தி ஆன்லைன் வலைவாசலுக்கு போன் மூலம் நேர்காணலில் உரையாடினார். இந்த உரையாடலில் அவரின் கனவுகள், போராட்டங்கள் மற்றும் காதல் என தான் வழக்கை குறித்து பேசினார். அதைப்பற்றி பார்ப்போம்!!

சச்சின் கண்டேன்... நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்:

தான் வாழ்க்கையில் கிரிக்கெட்டின் தொடக்கத்தைப் பற்றி பேசுகையில், சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதைப் பார்த்து, நானும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என முடிவு செய்தேன். மேலும் "நான் 10 வயதாக இருந்தபோது, என் கிரிக்கெட் தொடங்கியது. கோடை காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் கிடைக்கும். அப்பொழுது  கோடைகால முகாம்கள் நடக்கும். அந்த கோடைகால முகாம்களில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன், அங்கிருந்து தான், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தொடங்கியது".

கிரிக்கெட் மீது எனக்கு ஈர்ப்பு வரக் காரணம் சச்சின் டெண்டுல்கர் என்று அவர் கூறினார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதைக் காணும்போது, ​நானும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். சச்சின் அளவுக்கு விளையாட முடியுமா? என்று தெரியாது. ஆனால் நிச்சயமாக முயற்சி செய்வேன் என்று நினைத்தேன். அதிலிருந்து எனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. விடுமுறையின் போது, ​​அகாடமியில் கிரிக்கெட் பயிற்ச்சி பெறத் தொடங்கினேன்".

10_ம் வகுப்புக்கு பின் எடுத்த முடிவு:

என் வாழ்க்கையில் கிரிக்கெட்டை பற்றி ஒரு தெளிவான முடிவை 10 வகுப்புயை கடந்து பிறகு முடிவெடுத்தேன். அப்பொழுது, எனக்கு வயது சுமார் 15-16 இருந்திருக்கும். எனது வாழ்க்கையை கல்விக்கு அர்ப்பணிப்பதா? அல்லது கிரிக்கெட் விளையாட்டிற்கு செல்லவதா? நீண்ட யோசனை பிறகு முடிவு செய்தேன். அந்த சமயத்தில் நான் கிரிக்கெட்டை தேர்வு செய்தேன். என் வாழ்க்கையை கிரிக்கெட்டிக்காக அர்பணிப்பது என்று முடிவு செய்தேன்.

நான் கல்வி பற்றியும் கவலைப்பட்டேன்:

மாயன்கின் தந்தை ஒரு தொழிலதிபராகவும், தாய் ஒரு வீட்டின் மனைவியாகவும் உள்ளார். என் வாழ்க்கையை கிரிக்கெட்டிக்காக அர்பணிப்பது என்று முடிவு செய்தேன். ஆனால் கல்வி பற்றியும் எனக்கு கவலை இருந்தது. வீட்டில் என் முடிவுக்கு என்ன மாதிரியான ஆதரவு கிடைக்கும் என குழப்பத்தில் இருந்தேன். 
மாயக் கூறுகிறார், "என் குடும்பத்தின் எனக்கு முழு ஆதரவு கிடைத்தது. கிரிக்கெட் விளையாடுவதை என் தந்தை எப்போதும் தடுக்கவில்லை. இருப்பினும், நீ கிரிக்கெட் விளையாடியால், உன் கல்வி பாதிக்கப்படும். கல்வி மிக முக்கியம். ஆனால், உன் உள் உணர்வு கிரிக்கெட் விளையாட விரும்பினால், அதில் முழுமையாக் தன்னை அர்ப்பணிப்பு கடினமாக உழைக்க வேண்டும் என எனது தந்தை எனக்கு முழு ஆதரவு தந்தார்.

வீரேந்தர் ஷேவாக் ரோல் மாடல்:

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், அவரது முன்மாதிரியாக மயக் அகர்வால் கருதுகிறார். விரேந்தர் சேவாக், மற்ற அணி மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர். மேலும் அவர் கூறுகிறார், "அவர்கள் மிகவும் எளிமையாக விளையாடுகிறார்கள், அவரின் இந்த பாணி தான் எப்பொழுதும் என்னை ஈர்க்கிறது".

உள்நாட்டு கிரிக்கெட் தான் இலக்கை நோக்கி நகர்த்தும்:

உள்நாட்டு கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில், அது மிகவும் முக்கியமானது என்று மாயங்க் கூறுகிறார். அவர் கூறினார், "எந்த வீரருக்கும் முக்கிய தளமாக உள்நாட்டு கிரிக்கெட் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டை விளையாடுவதற்கு, உள்நாட்டு கிரிக்கெட் போட்டி தான் வீரர்கள் முக்கிய தளமாக இருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மிகவும் வலுவாக உள்ளது, எனவே உள்நாட்டு கிரிக்கெட் போட்டி எந்த இரு வீரருக்கும் மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடினால், அதன் பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும்."

Trending News