சண்டிகர்: ஒரு வாடிக்கையாளரிடமிருந்து ஒரு கேரி பைக்கு தனியாக பணம் வசூலித்ததற்காக நுகர்வோர் மன்றம் பிக் பஜார் மீது அபராதம் விதித்துள்ளது. பிக் பஜார் நுகர்வோர் சட்ட உதவி கணக்கில் பத்தாயிரம் ரூபாயை டெபாசிட் செய்யவும், வழக்கு செலவுக்காக ரூ. 500 புகார் தாரருக்கு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனுடன், மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர்க்கு ஆயிரம் ரூபாயையும், கேரி பைக்கு வாங்கிய 18 ரூபாயையும் திருப்பித் தருமாறு புகார் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
பஞ்ச்குலாவில் வசிக்கும் பல்தேவ், 2019 மார்ச் 20 அன்று பிக் பஜாரில் கடைக்குச் சென்றதாக நுகர்வோர் நீதி மன்றத்தில் புகார் அளித்தார். மன உளைச்சலுக்கு ஆளான பல்தேவ் நுகர்வோர் மன்றத்தை அணுகினார். அப்பொழுது பில்லிங் கவுண்டர் ஊழியர் அவரிடமிருந்து கேரி பைக்கு தனித்தனியாக ரூ.18 வாங்கியதாகவும், இதற்காக பலமுறை மறுத்து, அது சட்டவிரோதமானது எனக் கூறியும், பணியாளர் எதையும் கருத்தில் கொள்ளாமல், என்னிடம் கேரி பைக்கு தனியாக பணம் வசூலித்தார் என்று கூறினார்.
அதே நேரத்தில், பிக் பஜார் தரப்பில் ஆஜரான வக்கீல், நிறுவனத்திற்கு ஆதரவாக வாதிட்டார். அவர் கடையில் கேரி பேக் கட்டணங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாடிக்கையாளரிடமும் இது குறித்து கூறப்பட்டது என வாதிட்டார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டபின், நுகர்வோர் மன்றம் தனது தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.