தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை....!
தென் தமிழகத்தின் கடல் பகுதிகளில் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக கடல் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு மேல் எழ வாய்ப்புள்ளது.
எனவே, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் புதன்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது!
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் புதன்கிழமை சதமடித்தது.
அதிகபட்சமாககரூர் மாவட்டம், பரமத்தியில் 106 டிகிரி வெயில் பதிவானது. திருச்சியில் 105, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104, நாமக்கல், சேலம், மதுரை, வேலூரில் 103, தருமபுரியில் 102, சென்னை, பாளையங்கோட்டை, கோவையில் 100 டிகிரி வெயிலும் பதிவானது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.