புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ள Facebook! விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பதிவிடப்படும் கமெண்ட்ஸ்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'டவுன்வோட்' (downvote) என்கிற ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. 

Last Updated : Apr 30, 2018, 01:24 PM IST
புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ள Facebook! விவரம் உள்ளே! title=

பேஸ்புக்கில் பதிவிடப்படும் கமெண்ட்ஸ்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'டவுன்வோட்' (downvote) என்கிற ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. 

பேஸ்புக் ரியாக்ஷன்ஸ்களில் லைக், ஹார்ட், சிரிப்பு, அச்சிர்யம், வருத்தம் மற்றும் ஆங்கிரி ஸ்மைலி காணப்பட்டது அறிந்ததே. தற்போது இதில் 'டவுன்வோட்' (downvote) என்கிற ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக். 

அறிமுகம் செய்யபட்டுள்ள 'டவுன்வோட்' (downvote)  ஒரு பயனற்ற கிளிக் செய்யும் பட்சத்தில், குறிப்பிட்ட கமெண்ட் ஆனது மறைக்கடிக்கப்டும். பின்னர் இது "மனத்தை புண்படுத்துகிறது", "தவறாக வழிநடத்துகிறது" அல்லது "தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாதது" ('offensive', 'misleading', or 'off topic) என்கிற மூன்று விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கப்படும்.

இந்த புதிய அம்சமானது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உறுதிப்படுத்தபட்டது. இந்த 'டவுன்வோட்' (downvote) அம்சம் தனது சமூக நெட்வொர்க்கிங்கில் பரவும் போலியான செய்திகளை கட்டுப்படுத்த உதவும். பேஸ்புக்கின் நியூஸ் ஃபீடில் ஸ்க்ரோலிங் செய்யும் நேரத்தில், 'டவுன்வோட்' (downvote) செய்யப்படும் செய்திகள் அல்லது தகவல்களானது காணாமல் அடிக்கப்பட்டும். 

முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் "லைக்" பட்டனை அறிமுகம் செய்த நாளில் இருந்து தன் பயனர்கள் "டிஸ்லைக்" பட்டன் ஒன்றும் வேண்டும் என்கிற கோரிக்கையை விருப்பப்பட்டியலின் வழியாக தெரிவித்து வருகின்றன. 

Trending News