காங்., மூத்த தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற BJP வெற்றி வேட்பாளர்!

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தை சந்தித்து ஆசி பெற்றார்!! 

Last Updated : May 25, 2019, 07:01 PM IST
காங்., மூத்த தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற BJP வெற்றி வேட்பாளர்! title=

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தை சந்தித்து ஆசி பெற்றார்!! 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இந்த முறையும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. வடகிழக்கு தில்லி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஷீலா தீட்சித் மற்றும் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி போட்டியிட்டனர். 

இதில், மனோஜ் திவாரி சுமார் 3.65 லட்சத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.இந்த நிலையில், மனோஜ் திவாரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஷீலா தீட்சித்தை சந்தித்து இன்று ஆசி பெற்றார். 

 

Trending News