ம.நீ.ம கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கியுள்ளதாக கமல்ஹாசன் ட்வீட்!

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக கமல்ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார்..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 16, 2021, 10:30 AM IST
ம.நீ.ம கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கியுள்ளதாக கமல்ஹாசன் ட்வீட்! title=

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக கமல்ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார்..!

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கினார். அக்கட்சியின் சின்னமாக பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் (Lok Sabha elections) மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டது. அதில், மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) தென்சென்னை, வடசென்னை, கோவை உள்ளிட்ட பல தொகுதிகளில் லட்சக்கணக்கில் வாக்குகளைப் பெற்றது. இதனால் 4 ஆம் இடத்தைப் பிடித்தது. மொத்தமாக 38 தொகுதிகளில் 15,62,316 வாக்குகளைப்பெற்ற மக்கள் நீதி மய்யம் 4 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றது. இது மொத்த வாக்கு சதவீதத்தில் 3.7% ஆகும்.

இதை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் (Legislative election) போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராகிவிட்டது. நல்லவர்கள் தமது கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். 

இந்நிலையில், சமீபத்தில் கட்சிகளுக்கான தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதில், மக்கள் நீதி மய்யத்துக்குப் புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது. தமிழகத்தில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் MGR மக்கள் கட்சிக்கு (MGR Makkal Katchi) ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்தச் சின்னத்தை MGR மக்கள் கட்சி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ALSO READ | அஞ்சல் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு..!

இது தொடர்பாக பதிலளிக்க அவகாசம் தேவை என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்., 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். 234 தொகுதிகளுக்கும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு கமல் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பும் காட்சியைக் காணொலியாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது., “மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்சப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!" என குறிப்பிட்டுள்ளார். 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News