11:00 23-05-2019
குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா 1,25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
BJP President Amit Shah leading by over 125000 votes from Gujarat's Gandhinagar pic.twitter.com/xgFEaoQLWF
— ANI (@ANI) May 23, 2019
வாரணாசி: நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 100-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குல்பர்கா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பா.ஜ.க வேட்பாளர் மற்றும் மத்திய அமைச்சர் மானேகா காந்தி சுல்தான்பூரி தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பீகார் பேகுசராய் தொகுதியில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவரான கிரிராஜ் சிங் முன்னிலை வகிக்கிறார். அதே தொகுதியில் சிபிஐ சார்பில் போட்டியிட்ட கண்ணையா குமார் பின்னடைவு சந்தித்து வருகிறார். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோல் குருதாஸ் பூர் தொகுதியில் முன்னிலை. வகிக்கிறார்.
மீண்டும் மோடி.... வேண்டும் மோடி... என்ற வாசகத்திற்கு ஏற்ப பிரதமர் மோடி தனது உ.பி.யில் உள்ள வாரணாசியில் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். அதேபோல பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் குஜராத் காந்திநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
PM Narendra Modi leading by over 20,000 votes from UP's Varanasi, BJP President Amit Shah leading by over 50,000 votes from Gujarat's Gandhinagar (file pic) pic.twitter.com/kZ6TRadqb9
— ANI (@ANI) May 23, 2019