மே 23 காலை 3 மணியளவில் துவங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவினை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது!
543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் தமிழகத்தின் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 11 துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களா நடத்தப்பட்டது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிகை நேற்று காலை 8 மணியளவில் எண்ண துவங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 542 மக்களவைக்கான இறுதி முடிவினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி 303 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
17th Lok Sabha in making!
Presenting the final #ElectionResults2019 across all the States/UTs. pic.twitter.com/cVwC0AtPa5— Election Commission #DeshKaMahatyohar (@ECISVEEP) May 24, 2019
இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது;..
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களை தேர்தலில் பாஜக 303 இடங்களை பெற்றுள்ளது. 52 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மாநில கட்சியான தி.மு.க., 23 இடங்களில் வென்று தேசிய அளவில் 3-ஆம் இடத்தைபிடித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து திரினாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் YSR காங்கிரஸ் கட்சி தலா 22 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி (3), தெலங்காணா ராஷ்டீரிய சமிதி (9), பகுஜன் சமாஜ் கட்சி (10), சமாஜ்வாடி கட்சி (5) மிக குறைந்த இடங்களில் வெற்றிப்பெற்று பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.