சிவசேனாவில் குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள் உள்ளனர் என பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி அமைத்தல் குறித்து பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஒரு பெரிய அறிக்கை அளித்துள்ளார். மேலும் பாலாசாகேப் தாக்கரே இன்று பரலோகத்தில் மகிழ்ச்சியாக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுஷில் மோடி தனது அறிக்கையில் குறிப்பிடுகையில், சிவசேனா காங்கிரசுடன் ஒரு அரசாங்கத்தை அமைப்பதை பாலாசாகேப் ஒருபோதும் விரும்பவில்லை. சிவசேனாவின் நிலை பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் போன்றது. சிவசேனாவில் குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிராக அவர்கள் ஆட்சேபகரமான அறிக்கைகளை வெளியிட்டவர்கள், இது தாங்க முடியாத ஒன்று எனவும் அவர் தனது அறிகைகயில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தேஷேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோரை சுஷில் மோடி வாழ்த்தியுள்ளார். அதே நேரத்தில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா ஆகியவையும் இறுக்கமாக உள்ளன. மேலும், சுஷில் மோடி தனது ட்வீட்டில், 'காங்கிரஸை விட பாஜக மிகவும் நம்பகமானது என்பதை நிதீஷ் குமாரைப் போல ஷரத் பவார் அறிந்திருந்தார். சிவசேனா ராஷ்டீரிய ஜனதா தளம் போன்றது. சிவசேனா அல்லது RJD போன்ற கட்சிகளுடன் பணியாற்றுவது மிகவும் கடினம்." என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக., மகாராஷ்டிராவில் இன்று யாரும் எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவாரும், பாஜக-வும் (BJP) கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இவ்விரு கட்சி கூட்டணியில் ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், சரத் பவார் (Sharad Pawar), சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.
நேற்றிரவு வரை அஜித் பவார், மூன்று கட்சிகளுக்கு இடையில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழு வீச்சில் கலந்து கொண்டார். நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து சரத் பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தார்.
Congratulations @Dev_Fadnavis .Sharad Pawar like Nitish Kumar knew that BJP is more reliable then Congress.Shiv Sena was like RJD.Very difficult to work with party like SSor RJD full of lumpens.
— Sushil Kumar Modi (@SushilModi) November 23, 2019
ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக இன்று காலை மகாராஷ்டிராவில் பாஜக (Bharatiya Janata Party) தனது அரசாங்கத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அமைத்தது. பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் (Devendra Fadnavis) முதல்வராக பதவியேற்றார், NCP கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajit Pawar) துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும்(54) தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. எனினும் இதனை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.