டெல்லி: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்ட உள்ளது.
ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் தொடங்கியது. அதில் ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 11 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. ஒடிசா மாநிலத்தில் மட்டும் நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிக்கும், ஒடிசா மாநிலத்தில் 147 சட்டசபை தொகுதிக்கும், அருணாசலபிரதேச மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிக்கும், சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்த நான்கு மாநிலங்களிலும் வெற்றி பெற்று அடுத்து யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று அம்மாநில மக்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர்.