பிரதமர் நரேந்திர மோடி நாளை இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கவுள்ள நிலையில், மோடியின் அமைச்சரவையில் தனக்கு இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தனது உடல்நிலை மோசமடைந்து வருவதால் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைத் திசைதிருப்புவதில் முதன்மையான பணியில் தொடர்ந்து ஈடுபட எந்தவொரு வாய்ப்பையும் எடுக்க முடியாது என்று ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளார்.
I have today written a letter to the Hon’ble Prime Minister, a copy of which I am releasing: pic.twitter.com/8GyVNDcpU7
— Arun Jaitley (@arunjaitley) May 29, 2019
நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி நாளை இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக்கொள்கிறார்.
பிரதமர் மோடியுடன் அவரது அமைச்சரவை சகாக்களும் நாளை பதவியேற்கவுள்ளனர். இந்நிலையில் தற்போது மோடியின் அமைச்சரவையில் தன்னால் இடம்பெற்று கடமைகளை ஆற்ற இயலாது என முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடுகையில்.,
"கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காப பாடுபட்டதில் மகிழ்ச்சி. ஆளும் கட்சியில் இருந்த போதும் சரி, எதிர்கட்சியில் இருந்த போதும் சரி எங்கள் தலைமை என்னை நன்றாக பார்த்துக்கொண்டது.
எனினும் கடந்த 18 மாதங்களாக நான் கடுமையான உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளேன். இதன் காரணமாக நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்தும் விலகவில்லை. இதன் காரணமாக உடல்நலத்து கவனிக்க இயலாமல் போனது. நடந்து முடிந்த தேர்தலின் போதும் கூட சொந்த பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து தேர்தல் பணிகளில் பயணித்தேன். எனினும் புதிய ஆட்சியில் என்னால் தொடர்ந்து பயணிக்க உடல் நலம் ஒத்துழைக்க வில்லை. எனவே அமைச்சரவைக்கு வெளியே இருந்து ஆட்சிக்கு உதவுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.