NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி போடப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

ஜூலை 3 ஆம் தேதி, JEE Mains செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் அறிவித்திருந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2020, 03:08 PM IST
  • NEET மற்றும் JEE ஆகியவற்றை ஒத்திவைக்கக் கோரி போடப்பட்டிருந்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • JEE Mains தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெறும்.
  • NEET தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும்.
NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி போடப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!! title=

2020 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் மருத்துவ தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) மற்றும் பொறியியல் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) ஆகியவற்றை ஒத்திவைக்கக் கோரி போடப்பட்டிருந்த மனுவை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

"கொள்கை முடிவில் தலையிட எந்த காரணமும் இல்லை. NEET / JEE தேர்வுகளை ஒத்திவைப்பது மாணவர்களின் எதிர்கால கல்வியை ஆபத்தில் ஆழ்த்துவது போலாகும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

ஜூலை 3 ஆம் தேதி, JEE Mains செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் அறிவித்திருந்தார். நாட்டின் COVID-19 நிலைமை காரணமாக, JEE Advanced செப்டம்பர் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

"மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, தரமான கல்வியை உறுதி செய்வதற்காக, நாங்கள் JEE மற்றும் NEET தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். JEE Mains தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெறும். JEE Advanced தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும், NEET தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும் நடைபெறும்”என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால், கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் அனைத்து முக்கிய நுழைவுத் தேர்வுகளும் பிற்கால தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல தேர்வுகளுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

NEET என்பது மருத்துவ நுழைவுத் தேர்வாகும். இது ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படவிருந்தது. JEE என்பது பொறியியல் நுழைவுத் தேர்வாகும். இது ஜூலை 18-23 வரை நடத்தப்பட இருந்தது. தேசிய சோதனை நிறுவனம் (National Testing Academy) நடத்தும் தேர்வுகளை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுதுகிறார்கள்.

ALSO READ: கொரோனாவுக்கு மத்தியில் NEET தேர்வு தேவையா? இராமதாசு காட்டம்!

அதிகாரிகளின் எந்தவொரு உறுதியான அறிக்கையும் இல்லாமல், மாணவர்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் குறித்து பெற்றோர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். பெற்றோர்கள் குழு தேசிய சோதனை முகமைக்கு (NTA) கடிதம் எழுதியுள்ளது. நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வருவதால், குறிப்பிட்ட தேதியில் கால அட்டவணையின்படி தேர்வுகளை நடத்துமாறு பெற்றோர்கள் NTA-வை வலியுறுத்தியுள்ளனர்.

10 மற்றும் 12 வகுப்புகளின் சில CBSE தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், JEE மற்றும் NEET கல்வி காலெண்டரை மறுபரிசீலனை செய்யுமாறு NTA-வை மத்திய மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Trending News