கொரோனா பீதிகளுக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு(SSLC) பொதுதேர்வுகள் கர்நாடகாவில் உள்ள 2879 மையங்களில் வியாழக்கிழமை தொடங்கியது.
முன்னோடியில்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் தேர்வுகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 8.48 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர், மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
READ | பெங்களூருவில் COVID-19 பரவலை கட்டுப்படுத்த Lockdown அமல் செய்ய கர்நாடகா CM உத்தரவு...
தகவல்கள் படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பொருட்டு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு விரைவாக வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன் படி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். வெப்ப பரிசோதனை மற்றும் கைகளை சுத்தப்படுத்திய பின்னர், அவர்கள் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். முகமூடிகள் அணியவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு மையங்களில் சமூக இடைவெளியை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வகுப்பறையிலும் சுமார் 18 முதல் 20 மாணவர்கள் வரை மட்டுமே தேர்வு அமர்த்தப்பட்டனர் என்று கர்நாடக இடைநிலைக் கல்வி மற்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தகவல்கள் படி விழாயக்கிழமை முதல் மொழித் தேர்வு நடத்தப்பட்டது, மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் தொடர்சியாக நடத்தப்படும் நிலையில் தேர்வுகள் வரும் ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மாணவர்களுக்கும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கும் N95 முகமூடிகள் வழங்கப்பட்டு மற்றொரு வகுப்பறையில் அமர்ந்து தேர்வு எழுதும்படி செய்யப்பட்டது.
COVID-19 தொற்றுநோய் தொடர்பான ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பின்னர் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட தேர்வுகள் மூன்று மாதங்களுக்கு பின்னர் தற்போது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
READ | தனியார் மருத்துவமனைகளில் COVID-19 சிகிச்சைக்கான கட்டணங்கள் குறைப்பு..!
இதனிடையே, கேரளாவின் எல்லை நகரங்களில் இருந்து கர்நாடகா வந்து பள்ளி பயிலும் மாணவர்கள், தலபாடி செக் போஸ்ட் வழியாக வந்து தேர்வு எழுதியாதாக கூறப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட அனைத்து 367 மாணவர்களும் தட்சிணா கன்னடத்தில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதியதாகவும் கூறப்படுகிறது.
COVID-19 தொற்றுகள் அதிகரித்து வருவதால், கோவாவில் இரண்டு மையங்களில் தேர்வு நடத்த KSEEB ஏற்பாடு செய்தது. இந்த தேர்வு மையங்கில் கோவாவில் அமைந்துள்ள இரண்டு கன்னட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.