டிகிரி இருந்தால்போதும் திருப்பூர் மாவட்டத்தில் அரசு வேலை

டிகிரி படித்தவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் அரசு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 30, 2022, 01:38 PM IST
டிகிரி இருந்தால்போதும் திருப்பூர் மாவட்டத்தில் அரசு வேலை title=

திருப்பூரில் இருக்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான அறிவிப்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. டேட்டா ஆனலிஸ்ட் காலிப் பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம்.

வேலை வாய்ப்பு

திருப்பூரில் இருக்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள காலிப்பணியிடம். ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்வு செய்பவர்கள் பணியாற்றுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான விவரம்

17.06.2022 ஆம் தேதிக்குள் ஆப்லைன் மூலம் அதாவது அஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட நிர்வாகம் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் BA / BCA / B.Sc. Statistics / B.Sc. Mathematics போன்ற டிகிரி (10+2+3 Pattern) அல்லது ஏதேனும் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தகவல் தொகுப்பாளராக (Data Analyst) குறைந்தது 2 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி விண்ணப்பதாரர்களுக்கு தளர்கள் குறித்த விவரம் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஊதியம்; 

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார்ப்போல் மாத சம்பளம் கொடுக்கப்படும். 

தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை

இந்த தற்காலிக அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர். என்ற முகவரிக்கு 17.06.2022 ம் தேதி மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

DCPU Notification & Application

Official Website

மேலும் படிக்க | இபிஎஃப் கணக்கில் புதிய நாமினேஷனை தாக்கல் செய்வது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News