தில்லி மயூர் விகாரில் DTEA 8வது பள்ளிக் கட்டடம் இன்று தமிழக முதல்வர் திறப்பு!

தலைநகர் தில்லியில் 8வது தமிழ் பள்ளி ஒன்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

Last Updated : Nov 12, 2020, 01:27 PM IST
    1. தலைநகர் தில்லியில் 8வது தமிழ் பள்ளி ஒன்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
    2. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
    3. பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் படிப்படியாக தொடங்கப்பட உள்ளது.
தில்லி மயூர் விகாரில் DTEA 8வது பள்ளிக் கட்டடம் இன்று தமிழக முதல்வர் திறப்பு! title=

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (திதகக) சாா்பில் மயூர் விகாரில் கட்டப்பட்டுள்ள 8வது பள்ளிக் கட்டடத்தின் ‘அம்மா பிளாக்கை’ தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

தலைநகர் தில்லியில் தில்லி தமிழ்க் கல்விக் கழகம் 97 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறது. DTEA மூலம் ஏற்கெனவே 7 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஜனக்புரியில் 1975-இல் தொடங்கப்பட்ட DTEA பள்ளிக்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து தற்போது மயூா்விகார் ஃபேஸ்3-இல் அனைத்து நவீன வசதிகளுடன் DTEA எட்டாவது பள்ளிக் கட்டடத் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

 

ALSO READ | School Re-opening in India: உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயாரா?

No description available.

No description available.

இந்த கட்டடத்துக்கு ரூ.13 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்தது. தற்போது வரை ரூ.3.75 கோடி நிதியை வழங்கியுள்ளது. 

இந்தக் கட்டடத்திற்கான அடிக்கல்லை மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்த தற்போதைய குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு நாட்டினார். பள்ளியின் ‘அம்மா பிளாக்’ கிற்கான அடிக்கல் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மூலம் 2018, அக்டோபரில் நாட்டப்பட்டது.

இதில் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நவீன உள்கட்டமைப்பு: 
இந்த அம்மா பிளாக் கட்டடத்தில் ஐந்து தளங்கள் உள்ளன. கீழ்த் தளம் ஒரே நேரத்தில் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் 16 ஆயிரம் சதுர அடியில் அமையப் பெற்றுள்ளது. 37 வகுப்பறைகள், பணியாளா்களுக்கான அறைகள், பள்ளி முதல்வருக்குத் தனி அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 

No description available.

No description available.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பள்ளி தலைநகர்வாழ் தமிழர்களும், தமிழர்களின் குழந்தைகளும் பயன் பெறும் வகையில்அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் படிப்படியாக தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தில்லி மயூர் விகார் ஃபேஸ் 3 பகுதியில் கட்டப்பட்ட தமிழ் பள்ளிக்கூடத்தை காலை 10.45 மணிக்கு காணொலியில் திறந்து வைத்தார். 

 

ALSO READ | பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்கும் முடிவை தமிழக அரசு ஒத்திவைப்பா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News