நமது உடலில் உடல்நலக் குறைவால் ஏற்படும் வலிகளை மருந்து இல்லாமலே குறைப்பதற்கான சில டிப்ஸ்கள் -இதோ உங்களுக்காக..!
நமது உடலில் உடல்நலக் குறைவால் தலைவலி, கால்வலி, கைவலி, நெஞ்சுவலி என பல அவஸ்தைகளுக்கு உள்ளாவோம். உடனே நாம் வலி தாங்கமுடியாமல் பெய்ன் கில்லர் அல்லது மாத்திரைகளை உட்கொள்வோம். இனி அப்படி செய்ய வேண்டாம்.
உங்கள் உடலில் சில பாகங்களில் ஏற்படும் வலிகளை நம் உடலில் சில பாகங்களை மசாட்ச் செய்வதன் மூலம் அந்த வலிகளை குறைக்கலாம்...!
இதோ உங்களுக்கு அதற்க்கான டிப்ஸ்.....!
நெற்றிப்பொட்டில் விரல் வைத்து அழுத்துவதால் ஏற்படும் நன்மை..!
இரு புருவங்களுக்கும் இடையே நெற்றிப்பொட்டில் விரலை வைத்து 3 செ.மீ அளவில் மேல் நோக்கி சுமார் 45 முதல் 60 நொடிகள் வரை மசாட்ச் செய்தால் நம் உடலில் ஏற்படும் பல வலிகள் குறையும். அதுமட்டும் இன்றி, புத்துணர்ச்சியையும் தருகிறது.
> இப்படி செய்வதால் தாங்கமுடியாத தலைவலி உடனே குணமாகும்.
> வேலை செய்வதற்கு முன் இதை செய்தால் ஒரே மனநிலையில் செயல்படலாம்.
> வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் குறையும்.
> படிப்பதற்கு முன் மாணவர்கள் இதை செய்தால் நியாபக சக்தி பெருகும்..!