அமெரிக்கா டிரம்ப் டவரில் தீ விபத்து: ஒருவர் பலி

அமெரிக்கா-வில் உள்ள டிரம்ப் டவரில் திடீர் தீ விபத்து - ஒருவர் உயிரிழந்தார்

Last Updated : Apr 8, 2018, 11:14 AM IST
அமெரிக்கா டிரம்ப் டவரில் தீ விபத்து: ஒருவர் பலி title=

அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்பு-க்கு நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் 58 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இதில் மேற்பரப்பில் உள்ள 3 அடுக்குகளை தனது வீடாக மாற்றி வசித்து வருகிறார் அதிபர் டிரம்ப். அதிபராகப் பொறுப்பேற்றதும் டிரம்ப் பெரும்பாலும் வாஷிங்டன் நகரில் தான் வசித்து வருகிறார்.   

இதை தொடர்ந்து நேற்று மாலை சுமார் இந்திய நேரபம் படி 5.30 மணியளவில் டிரம்ப் டவரின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பிடித்த தீ மளமளவென பரவியது. தகவலறிந்து அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. 

இந்நிலையில், சுமார் 140-ம் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வந்தார். இதை தொடர்ந்து ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

டிரம்ப் டவரில் ஏற்பட்ட தீயை போராடி விரைவில் அணைத்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அதிபர் டிரம்ப் ட்விட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

Trending News