ஏன் வளையல் முக்கியம்!! தெரிந்துக்கொள்வோம்

Last Updated : Aug 17, 2017, 12:42 PM IST
ஏன் வளையல் முக்கியம்!! தெரிந்துக்கொள்வோம் title=

அக்காலத்திலும், இக்காலத்திலும் பெண்களுக்கு தனி அழகு தருவது அவர்கள் அணியும் வளையல் தான், அதிலும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது. வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது சாஸ்திரம் சொல்கிறது. தெய்வ வழிப்பட்டின்போது வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம் என்று கூறுவர்கள்

வளையல் வகைகள் :-

கண்ணாடி வளையல், வேப்பிலை கொழுந்து வளையல், தங்க வளையல் , வெள்ளி வளையல் , செம்பு வளையல் ,பிளாஸ்டிக் வளையல் , மெட்டால் வளையல் , முத்து வளையல்,  பேன்சி வளையல் ,போன்று வளையல் விதவிதமாக உள்ளன

வேப்பிலை வளையல் :-

பெண்களுக்கு வளைகாப்பு செய்யும்போது இன்னும்  சில கிராமப்புறங்களில் முதலில் வேப்பிலை கொழுந்தை வளையல் போல செய்து, இறைவன் முன் வைத்து வணங்கி, அந்த வேப்பிலை வளையலைதான் முதலில் அணிவிப்பார்கள்.ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால், கர்ப்பவதியாக இருக்கும் பெண்ணின் அருகில் தோஷம் இருப்பவர்களோ, வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறவர்களோ அல்லது பொறாமை மனம் படைத்தவர்களாலோ எந்த ஆபத்தும் அந்த பெண்ணுக்கு வராமல் இருக்க வேப்பிலை வளையல் அணிவிப்பார்கள்.பிறகுதான் தங்க வளையலையே போடுவார்கள். இது மருத்துவம் மற்றும் தெய்வ சக்தி நிறைந்த வளையல் வேப்பிலை கொழுந்தை வளையல் யாகும். 

கண்ணாடி வளையல் :-

சலசலக்கும் ஓசையுடன் கண்ணாடி வளையல் அணியும்போது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.மற்றும் கலர்கலர் நீறத்தில் அழகாக இருக்கும் கண்ணாடி வளையல் அணியும்போது மனதில்  மகிழ்ச்சி ஏற்படும், கலகல ஓசையால் எந்த துஷ்டசக்தியையும் நெருங்கவிடாது. அத்துடன் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு மகத்துவம் உண்டு. பச்சை, சிகப்பு, மஞ்சள், கண்ணாடி வளையல்களை அதிகம் விரும்புவார்கள். இதற்கு காரணம் பச்சை, மனதை அமைதிப்படுத்தும். வாழ்வை செழிமையாக்கும். சிகப்பு,  கண்திருஷ்டியை அகற்றும் சக்தி கொண்டது,மஞ்சள் மங்கலம் கொண்டது.  

தங்கம் வளையல் :-

உடலுக்கு நல்லது மற்றும் அழகு கெடுக்கும். தங்கம் சக்தியின் வழிப்படுத்தல்  வேலைப்படுமிக்க வளையல்கள் தொடங்கி வைரம், ஜாதிக்கற்கள் மற்றும் நலமுத்து பதிக்கப்பட்ட வளையல்கள் வரை பல தர வடிவமைப்புகள் உண்டு. தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களாலான வளையல்கள் கல கலவென்று ஒலி எழுப்பும். செயற்கை வளையல் ஆபரணங்கள் வேறுவித ஒலியினை எழுப்பும்.

செம்பு வளையல் :-

இந்தியால் மகுஜ்ஹாரி என்னுமிடத்தில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த செம்பு வளையல் மற்றொரு சரித்தர சான்றாகும். அடுத்து வேலைப்படமைந்த வளையல்கள் மௌரிய சாம்ராஜ்ஜிய (கி.மு 322 - 185) காலத்தது ஆகும். பொன் வளையல்கள் வரலாற்று சிறப்பு மிக்க தட்சசீலம் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) என்ற இடத்தில் அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கலைநயமிக்க சிப்பி வளையல்கள் பல மௌரிய சாமராஜ்ஜிய அகழ்வாய்வுகளில் கிடைத்தன. செம்பு ஆணிகள் மற்றும் தங்க இழைகள் போன்ற வேறு சில அம்சங்கள்.

வளையளின் வரலாறு :-

கடல் சிப்பி, தாமிரம், தங்கம், அகேட், சால்சிதோனி போன்ற பொருட்களிலான வளையல்கள் இந்தியாவில் முற்றிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இடக்கையில் வளையல்கள் அணிந்து நட னமாடும் ஒரு பெண்ணின் உருவம் மோகன்ஜோ தாரோ அகழ்வாய்வுகளில் (கி.மு 2600) கிடைக்கின்றன.

வளையல் உற்பத்திகள் :- கண்ணாடி வளையல்கள் வட இந்தியாவில் பிரோஜாபாத் என்னுமிடத்தில் தயாரிக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் கண்ணாடி வளையல்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் லாத் பஜார், ஹைதராபாத் என்னுமிடத்தில் உலகப் புகழ் பெற்ற சந்தை உள்ளது.

மங்கள பொருட்களில் வளையலும் இடம் பெற்று இருக்கிறது. தங்கமோ, வெள்ளியோ அல்லது கண்ணாடி வளையலோ எதுவாக இருந்தாலும் சரி, பெண்கள் கண்டிப்பாக கைகளில் வளையலை அணிய வேண்டும். இதனால் லஷ்மி கடாக்ஷமும், மனதில் அமைதியும் உண்டாகும். வளையல் அம்மனுக்கு சிறந்த வழிப்பாடுகள் நடக்கும் ஆடி மாதத்தில் வளையல் பூஜைகள் நடக்கும். 

Trending News