ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனேக இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா கல்யாண மகா உற்சவ விழா போன்று அரங்கேறும்.
விரதம் இருப்பது எப்படி?
ராமநவமி அன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப் பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக ராமருக்கு படைக்க வேண்டும். ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற எழுத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுதுவது சிறப்பு. ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.