புகழ்பெற்ற பூரம் திருவிழா வெகுவிமர்சையாக துவங்கியது!

கேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழா துவங்கியது!

Last Updated : May 12, 2019, 10:47 PM IST
புகழ்பெற்ற பூரம் திருவிழா வெகுவிமர்சையாக துவங்கியது! title=

கேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழா துவங்கியது!

பூரம் திருவிழாவிற்கான முன்னோட்டமாக அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது. கேரள மாநிலம் திருச்சூரில் இன்று பூரம் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ராமச்சந்திரன் யானைக்கு மதம் பிடித்து, இரண்டு பேரை மிதித்துக் கொன்றதால் இந்த ஆண்டு பூரம் திருவிழாவில் ராமச்சந்திரன் யானை கலந்துக் கொள்ள அரசு நிர்வாகம் தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யானை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், அரசுத் தரப்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
போச்சுவார்த்தையின் முடிவில், யானை ராமச்சந்திரன் செல்லும் பாதையில் பத்து மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பூரம் விழாவின் தொடக்கத்தில், ஒரு மணி நேரம் மட்டும் யானைகளின் அலங்கார அணிவகுப்பை ராமச்சந்திரன் யானை தலைமை தாங்கி செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால், யானை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் இருந்து பின்வாங்க யானைகளை பங்கேற்க செய்ய சம்மதம் தெரிவித்தனர். எனவே, வழக்கமான உற்சாகத்துடன் பூரம் திருவிழா வெகுவிமர்சையாக துவங்கியது.

Trending News