ஜெகநாதர் ரத யாத்திரை 2020 தொடங்கம்: திதி, முக்கியத்துவம் மற்றும் சடங்குகள் என்ன

இந்த புனித திருவிழா ஒடிசாவின் பூரியில் நடைபெறுகிறது,

Last Updated : Jun 23, 2020, 09:32 AM IST
    1. ரத யாத்திரை 15 நாள் நடக்கும் திருவிழாவாகும்.
    2. துவிதியை திதி ஜூன் 22 காலை 11:59 மணிக்கு தொடங்கி ஜூன் 23 காலை 11.19 மணிக்கு முடிவடையும்.
    3. சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.
ஜெகநாதர் ரத யாத்திரை 2020 தொடங்கம்: திதி, முக்கியத்துவம் மற்றும் சடங்குகள் என்ன title=

புதுடெல்லி: தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் ஜெகநாதர் ரத யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஒடிசா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் பூரிக்கு வருகிறார்கள். இருப்பினும், இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் கொண்டாட்டங்கள் இன்றி அமைதியாக நடக்கிறது. 

ரத யாத்திரை 15 நாள் நடக்கும் திருவிழாவாகும். இது இந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி விழும் ஆஷாதா மாதத்தின் சுக்ல பட்சம் போது துவிதியை திதியில் தொடங்குகிறது. டிரிக்பஞ்சாங்கின் கூற்றுப்படி, துவிதியை திதி ஜூன் 22 காலை 11:59 மணிக்கு தொடங்கி ஜூன் 23 காலை 11.19 மணிக்கு முடிவடையும்.

 

READ | ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..!

 

ஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் பூரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

முக்கியத்துவம் மற்றும் சடங்குகள்:

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பூரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது. தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

Trending News