அன்னை லட்சுமியை பகிர்ந்த ஹாலிவுட் நடிகையும், இந்தியர்களின் நெகிழ்ச்சியும்...

ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் (Salma Hayek) இந்து மதக் கடவுளான அன்னை லட்சுமியை குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார். அதுவும் அவர் ஒரு சுவாரஸ்யமான தலைப்புடன் பகிர்ந்து கொண்டது, அவரது ரசிகர்களை திகைக்க வைத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2020, 07:11 PM IST
அன்னை லட்சுமியை பகிர்ந்த ஹாலிவுட் நடிகையும், இந்தியர்களின் நெகிழ்ச்சியும்... title=

ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் (Salma Hayek) இந்து மதக் கடவுளான அன்னை லட்சுமியை குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார். அதுவும் அவர் ஒரு சுவாரஸ்யமான தலைப்புடன் பகிர்ந்து கொண்டது, அவரது ரசிகர்களை திகைக்க வைத்தது.

இந்திய தெய்வத்தின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட சல்மா, லட்சுமி தேவியின் புகைப்படம் தன்னை "மகிழ்ச்சியாக" உணர வைக்கிறது என்று எழுதினார். "நான் என் உள் அழகுடன் இணைய விரும்பும்போது, கடவுள் லட்சுமி தேவியை மையமாகக் கொண்டு என் தியானத்தைத் தொடங்குகிறேன். இந்து மதத்தில் அன்னை லட்சுமியை, செல்வம், அதிர்ஷ்டம், அன்பு, அழகு, மாயை ('illusion' அல்லது 'magic' என்று பொருள்), மகிழ்ச்சியுடன் தொடர்புபடுத்துகின்றனர். தெய்வத்தின் உருவம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, நமது உள் அழகை ஆனந்தமாக்கும் மிகப் பெரிய திறவுகோலாக திகழ்கிறார் அன்னை லட்சுமி தேவி" என்ற பொருள் படும் வார்த்தைகளில் விஷ்ணுவின் மார்பில் உறையும் அன்னை லட்சுமியை சிலாகித்து பேசியிருக்கிறார் ஹாலிவுட் நடிகை.


 
 
 
 
 
 
 
 
 

When I want to connect with my inner beauty, I start my meditation focusing on the goddess Lakshmi, who in Hinduism represents wealth, fortune, love, beauty, Māyā (literally meaning "illusion" or "magic”), joy and prosperity. Somehow her image makes me feel joyful, and joy is the greatest door for your inner beauty. Cuando quiero conectarme con mi belleza interior, comienzo mi meditación enfocándome en la diosa Lakshmi, quien en el hinduismo representa la riqueza, la fortuna, el amor, la belleza, Māyā (que literalmente significa "ilusión" o "magia"), alegría y prosperidad. De alguna manera su imagen me trae alegria, y piensa que la alegría es la puerta más directa para tu belleza interior. #innerbeauty #hinduism #lakshmi #meditation

A post shared by Salma Hayek Pinault (@salmahayek) on

சல்மா ஹயக்கின் இடுகைக்கு பதிலளித்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, “ஆச்சரியமாக இருக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.

ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக்கின் நண்பர்களுமான ஜூலியா ராபர்ட்ஸ், ரஸ்ஸல் பிராண்ட் மற்றும் மைலி சைரஸ் என பலரும் லட்சுமி தேவியின் பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். 

 Also Read | நாத்திகம், மதம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை மனித மனம் தேடுவதற்கான காரணம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News