திருமணத்தின் போது புடவையால் தலையை மறைக்க மணப்பெண் மறுத்ததால், மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்!
திருமணத்தின் போது பிரியாணி பரிமாறவில்லை, ரசம் சரியில்லை என பல திருமணங்கள் நடைபெறாமல் முடிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது, மணப்பெண் திருமணத்தின் போது தலையை துணியால் மறைக்கவில்லை என திருமணம் ஒன்று நடைபெறாமல் முடிவுக்கு வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மணப்பெண் வர்ஷா சௌனா ஒரு அரசு பணியாளர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பன்சோலி என்னும் கட்டிட பொறியாளருக்கும் திருமணம் நிச்சையக்கப்பட்டது. திருமண நாள் அன்று மணப்பெண் முதலில் கவுன் அணிய முடிவு செய்ததாவும், பின்னர் மணமகன் வீட்டார் கட்டாயத்தின் பேரில் புடவை அணிந்து மணப்பந்தலில் அமர்ந்ததாவும் தெரிகிறது.
திருமண முகுர்த்தம் நெருக்கும் தருவாயில் மணமகனது வீட்டார், மணப்பெண் புடவையால் தலையை மறைப்பது மரபு, எனவே மணப்பெண் தலையினை புடவை முந்தானியால் மறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். முற்போக்குவாதியான வர்ஷா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார் கடிந்துள்ளனர்.
இதனையடுத்து மணமக்கள் வீட்டாருக்கு இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இறுதியில் இரு குடும்பத்தாரும் பேசி திருமணத்தை ரத்து செய்தவாத முடிவுசெய்துள்ளனர். முன்னதாக விவரம் காவல்துறை வரை எட்ட, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் திருமண ரத்து பத்திரம் கையொழுத்தாகியுள்ளது.