டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று ராகுல் காந்தி, சோனியாகாந்தி உரையாற்றி வருகின்றனர்.
சவாலான நேரத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல்காந்திக்கு சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Delhi: Sonia Gandhi hugs Rahul Gandhi after after completing her speech at #CongressPlenarySession pic.twitter.com/66NhMrsf4e
— ANI (@ANI) March 17, 2018
காங்கிரஸ் கட்சியின் வெற்றியாகும். 40 ஆண்டுகளுக்கு முன் சிக்மங்களூரில் இந்திரா பெற்ற வெற்றி இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
வெறுப்புணர்வு எனும் கருவியைப் பயன்படுத்தி, மக்களிடையே பிரிவினையை பாரதீய ஜனதா உண்டாக்குகிறது. ஆனால், இதுபோன்ற செயல்களை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி செய்யாது. இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். சாதி,மத பாகுபாடு இன்றி அனைத்து மக்களையும் ஒன்றாக அழைத்துச் செல்லும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.
என் ஆழ்மனதில் இருந்து கூறுகிறேன், இந்த நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு வெறுப்பும், அன்பும் தான். பாஜக வெறுப்புணர்வை பயன்படுத்துகிறது, நாங்கள் அன்பை கருவியாகப் பயன்படுத்தி மனிதர்களை அரவணைக்கிறோம்.
மோடியால் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். ஏன் வேலையின்மை குறையவில்லை, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை ஏன் கிடைக்கவில்லை என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியாது.
We are exposing fraud & corruption by PM Modi & the people with him, using proof: Sonia Gandhi at #CongressPlenarySession pic.twitter.com/VObR17wmse
— ANI (@ANI) March 17, 2018
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை மோடி அரசு அழித்து வருகிறது என சோனியாகாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
The promises of 'Sabka Saath Sabka Vikas' and 'Na khaaoonga na khaane doona' by the current govt is nothing but 'drama' & their tactic to get votes: Sonia Gandhi at #CongressPlenarySession pic.twitter.com/FCAGbp64pp
— ANI (@ANI) March 17, 2018
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும், உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் கோரக்பூர் தொகுதி மற்றும் புல்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி 59,613 வாக்குகள் அதிகமாக பெற்று அமோக வெற்றி பெற்றது.
உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு, இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வி பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்;- உத்தரப்பிரதேச மக்கள் பா.ஜ.க மீது கோபத்தில் இருப்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
உ.பி.யில் பாஜக மீதான கோபம் காரணமாக மாறுதலுக்காக சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம் என ராகுல் தெரிவித்துள்ளார்.
This is the only symbol (Congress party symbol) that can unite the nation and take it forward: Rahul Gandhi at Congress Plenary Session in Delhi pic.twitter.com/mE4fNbAs4n
— ANI (@ANI) March 17, 2018
இந்நிலையில், நேற்று தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்பது குறிபிடத்தக்கது.
Sonia Gandhi, Rahul Gandhi & Manmohan Singh at #Delhi's Indira Gandhi Stadium for Congress' plenary session. pic.twitter.com/0QtEdWENym
— ANI (@ANI) March 17, 2018