நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் மற்றும் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்புச் சட்டயணிந்து அவை நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என தீர்மானம் நிறைவேற்றி உரிய அரசாணை பிறப்பிக்கும் வரை சட்டமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிப்போம் என திராவிட முன்னேற்றக் கழகம் கூறியுள்ளது.
இதனால் இன்று போட்டி சட்டச்சபை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த போட்டி சட்டச்சபை கூட்டத்தின் சபாநாயகராக துரைமுருகன் செயல்பட உள்ளார். எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருப்பார். இந்த கூட்டத்தில் காவிரி விவகாரம், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்த திமுக எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்புவார்க்ள. அதற்க்கு பதலளித்து போட்டி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவார்கள்.
ஏற்கனவே 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டி சட்டசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதேபோல 2006 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டி சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.