சினிமா ஸ்டிரைக்கால் நாச்சியார் படத்துக்கு நல்ல வரவேற்பு!

இயக்குனர் பாலா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில்  ஜிவி பிரகாஷ் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் நாச்சியார்!

Last Updated : Apr 7, 2018, 01:07 PM IST
சினிமா ஸ்டிரைக்கால் நாச்சியார் படத்துக்கு நல்ல வரவேற்பு! title=

இயக்குனர் பாலா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில்  ஜிவி பிரகாஷ் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் நாச்சியார்!

இப்படத்தின் டீஸர் காட்சிகள் முன்னதாக வெளியாகி பெரும் சர்ச்சைகளையும் சந்தித்தது. டீஸரில் நடிகை ஜோதிகா கூறிய வார்த்தை தான் இந்த சர்சைகளுக்கு காரணமாம்.

பின்னர், கடந்த பிப்ரவரி 16 அன்று திரைக்கு வந்த இந்த படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், நாச்சியார் வெளிவந்த இரண்டாவது வாரத்திலிருந்து சினிமா ஸ்டிரைக் தொடங்கியது. அதன் பிறகு புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதனால் படத்துக்கு நல்ல வசூலும் ஆனதாக சொல்லப்படுகிறது. இதனால் வேறு படங்கள் இல்லாததால் தியேட்டர்காரர்கள் நாச்சியாரை தொடர்ந்து திரையிட்டனர்.

இதன் காரணமாக இன்று 50வது நாள் வரை தியேட்டரில் ஓடி கொண்டிருக்கிறது நாச்சியார் திரைப்படம். சென்னையில் மட்டும் முக்கியமான மால் தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளாக 50வது நாளை எட்டிப்பிடித்திருக்கிறது இந்த நாச்சியார் திரைப்படம்.

Trending News