வெளியானது CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு!!

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 12 மணியளவில் வெளியிடப்பட்டது.

Last Updated : May 26, 2018, 02:58 PM IST
வெளியானது CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு!! title=

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 12 மணியளவில் வெளியிடப்பட்டது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. கேள்வித்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு Economics தேர்வு ஏப்ரல் 25-ம் நாள் மீண்டும் நடைபெற்றது. இந்த CBSE 12-ம் வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 138 மையங்களில் எழுதினார்கள். மேலும் தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரத்து 500 பேர் எழுதினர்.

இந்நிலையில் CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. results.gov.in, www.cbse.nic.in மற்றும் www.cbseresults.nic.in என்ற, இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் CBSE 12-ம் வகுப்பு முடிவுகளை பார்க்கலாம்.

CBSE பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாகவும் பார்க்கலாம்.

எஸ்எம்எஸ் மூலம் பார்க்க எண்:- 

Type 'cbse12' and send it to mobile number - 7738299899

 

தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

  • www.cbse.nic.in , www.cbseresults.nic.in, results.gov.in எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
  • இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் CBSE Class 12 Result 2018 கிளிக் செய்யவும்.
  • கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
  • பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
  • பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.

Trending News