காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்.
இதை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்காததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, நாளைக்குள் காவிரி நதிநீர் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவிரி நீர் பங்கீட்டு வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை தயார் செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், நாளை நீர் பங்கீட்டு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும்.
இந்தநிலையில், காவிரி நீர் பங்கீட்டு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய 2 வாரக்காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது.