மனித வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிப்பது தான் மிக முக்கியம். பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கு ஏற்ப பணத்தை சேமிக்க விரும்பினால், செலவு செய்வதில் சிக்கனம் காட்ட வேண்டும். சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். பணத்தை சிக்கனமாக செலவு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணம் உங்கள் எதிர்காலத்துக்கும், குழந்தைகளுக்கும், கனவை நனவாக்கவும் முக்கிய பங்கு வகிக்கும். அனைவரும் பணத்தை சேமிக்க நினைக்கிறார்கள். ஆனால் அனைவராலும் முடிகிறதா என்றால், இல்லை. அதற்கு காரணம் பல இருக்கின்றன. பணத்தை சேமிக்க வேண்டும் என்றால், நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதில் சுய விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஏனென்றால் கொடிய கொரோனா வைரல் தாக்குதலுக்கு பிறகு, ஏற்பட்டுள்ள பொருளாதாரா மந்தநிலை காரணமாக விலைவாசி உயர்வு, வேலையின்மை காரணமாக பலரின் சேமிப்பு கனவு உடைத்தெறியப்பட்டுள்ளது. முதலில் சேமிக்க பழகுவது கொஞ்சம் கடினமான காரியமாக இருந்தாலும், சிறுக சிறுக சேமித்து வந்தால், சேமிக்கும் ஆவலைத் தூண்டும். அதாவது சிறுதுளி பெருவெள்ளம் போல உங்கள் சேமிப்பு பணம் பெருகும்.
பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதற்கான சில எளிய வழிகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், நீங்களும் கோடிஸ்வரன் ஆகலாம். அதேநேரத்தில் பொருளாதாரத்தின் அடிப்படையில் உங்களால் சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீங்கள் எடுக்கும் சில முடிவுகளின் அடிப்படையில் உங்களால் பணத்தை சேமிக்க முடியும்.
நீங்கள் செலவு செய்யும் பணத்தை கண்காணியுங்கள்
உங்கள் பணம் எங்கு செல்கிறது, எப்படி செலவாகிறது என்று உங்களுக்குத் தெரிந்தால், தேவைப்படும் நேரத்தில் மாற்றங்களைச் செய்வது எளிதாக இருக்கும். உங்கள் பணம் எங்கெல்லாம் செலவழிக்கப்பட்டது என்பதை அறிந்துக்கொள்ள ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் முழுவதும் செலவு செய்யப்பட்டதை ஒரு படிவத்தில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது. இதன்மூலம் எதற்கு, எங்கு பணம் செலவு செய்யப்பட்டது என்பது குறித்து அறிந்துக்கொள்ளலாம். அதன் அடிப்படையில் வீண் செலவிகளில் இருந்து பணத்தை சேமிக்கலாம்
மேலும் படிக்க: பர்ஸில் என்றென்றும் பணம் நிறைந்திருக்க வேண்டுமா... ‘இவற்றை’ செய்தால் போதும்.
பணத்தை சேமிப்பதற்கான பட்ஜெட் தயார் செய்யுங்கள்
ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் எங்கு செலவழித்தீர்கள் என்று தெரிந்தவுடன், உங்கள் செலவுகளை குறைக்கவும், வீணான செலவுகளை தவிர்க்கவும் உதவியாக இருக்கும். அதன்பிறகு உங்கள் சேமிப்புக்கான பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை சேர்க்க முடியும். உங்கள் செலவுகள் உங்கள் வருமானத்தை எவ்வாறு அளவிடுகின்றன என்பதை உங்கள் பட்ஜெட்டில் குறித்துக்கொள்ள வேண்டும். அது உங்கள் அதிக செலவுகளைக் கட்டுப்படுத்தலாம். மறுபுறம் சேமிப்பு அதிகரிக்கலாம்.
சேமிக்கவும் பழக்கத்தை தொடந்து கடைபிடியுங்கள்
ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளப் பணத்தில் இருந்து சிலவற்றை உங்கள் சேமிப்புக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யுங்கள் அல்லது உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் தானியங்கி பரிமாற்றத்தை அமைக்கவும். அதாவது உங்கள் வருமானத்தில் 10 முதல் 15 சதவிகிதம் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: போஸ்ட் ஆபிஸின் அசத்தலான திட்டம்! ரூ.7000 முதலீடு செய்து ரூ.5 லட்சம் பெறலாம்!
சேமிப்பு இலக்குகை அமைத்துக்கொள்ளுங்கள்
பணத்தை சேமிக்க சிறந்த வழிகளில் ஒன்று இலக்கை நிர்ணயிப்பது. நீங்கள் எதற்க்கா சேமிக்க விரும்புகிறீர்கள் என்று யோசிக்கத் தொடங்குங்கள். ஒருவேளை நீங்கள் திருமணம் செலவுகளுக்காக சேமிக்கலாம், விடுமுறைக்கு வெளியே செல்லத் திட்டமிடலாம் அல்லது ஓய்வூ காலத்திற்கு சேமிக்கலாம். உங்கள் சேமிப்பை பொறுத்து உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை, எவ்வளவு காலம் சேமிக்கலாம் என்பதை கண்டுபிடிக்கவும். அதன்பிறகு குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளின் அடிப்படையில் சேமிக்கலாம்.
உங்கள் சேமிப்பு எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை தொடர்ந்து கவனிக்கவும்
உங்கள் பட்ஜெட்டை மதிப்பாய்வு செய்து ஒவ்வொரு மாதமும் உங்கள் முன்னேற்றத்தை சரிபார்க்கவும். இது உங்கள் தனிப்பட்ட சேமிப்புத் திட்டத்தின் சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்யவும் உதவுகிறது. பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதைப் புரிந்துகொள்வது, உங்கள் இலக்குகளை விரைவாக அடைய, அதற்கான வழிகளைக் கண்டறிய உத்வேகம் அளிக்கும்.
மேலும் படிக்க: இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ