Costly Water Bottle in World: உலகில் பல வகையான ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்கள் உள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களின் விலை குறித்து கேள்விப்பட்டிருப்போம். இதில் பெரும்பாலானோர் வைரம், தங்கம், வெள்ளி உட்பட சில பொருட்கள் விலை உயர்ந்ததாக கருதுகின்றனர். ஆனால் சில நேரங்களில் நமக்கு தேவையான தினந்தோறும் பயன்படுத்தும் சில பொருட்களின் விலை குறித்து தகவல்கள் முன்னுக்கு வரும்போது, அதன் விலை தங்கம், வெள்ளி மற்றும் வைரங்களை விட மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இதுபோன்ற பொருட்களின் விலையைக் கேட்டால், மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதாவது தங்கம், வெள்ளி, வீடுகளின் விலை அதிகம் என்றால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்ப முடியவில்லை அல்லவா.. வாருங்கள் தெரிந்துக்கொள்ளுவோம்.
இந்த தண்ணீர் பாட்டிலின் விலை 65 லட்சம் ரூபாய்
நீங்கள் ஒரு பாட்டில் குடிநீருக்காக இதுவரை 15 அல்லது 20 ரூபாய் செலவழித்திருக்க வேண்டும். அதுவே தியேட்டர், விமான நிலையங்களில் ஒரு பாட்டில் தண்ணீருக்கு நூறு முதல் நூற்றைம்பது ரூபாய் வரை செலவாகியிருக்கும். ஆனால் இன்று நாம் பேசும் தண்ணீர் பாட்டில் பல லட்சம் மதிப்புடையது. ஆம், இந்த தண்ணீரின் ஒவ்வொரு துளியும் விலைமதிப்பற்றது. ஏனெனில் இந்த தண்ணீரின் ஒரு பாட்டில் விலை 65 லட்சம் ரூபாய் ஆகும்.
மேலும் படிக்க: ரூ.4,600-க்கு விற்கப்படும் வாட்டர் பாட்டில்! அப்படி என்ன ஸ்பெஷல்?
ஏன் இவ்வளவு மதிப்பு?
பேவர்லி ஹில்ஸ் (Beverly Hills) 90ஹெச்20 (90H20) தண்ணீர் பாட்டிலின் விலை 65 லட்சம் ரூபாய். அதாவது, இந்த பாட்டிலில் இருக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. ஒரு சாதாரண மனிதன் அதை வாங்க நினைத்தாலும், அவனது முழு சொத்தையும் விற்க வேண்டியிருக்கும்.
இந்த Beverly Hills 90H20 தண்ணீர் பாட்டிலின் விலை ஏன் அதிகமாக உள்ளது? உண்மையில், பேவர்லி என்ற நிறுவனம் இந்த தண்ணீர் பாட்டிலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பாட்டிலின் மூடி 14 காரட் வெள்ளைத் தங்கத்தால் ஆனது. இது தவிர, அதன் மூடியில் 250 வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க: Jackpot! 2 பாட்டில் தண்ணீர் Serve செய்த பெண்னுக்கு ₹ 7 லட்சம் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR