பிசினஸ் ஐடியா: சிறந்த வேலை அல்லது நல்ல வருமானம் கிடைக்கும் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என ஒவ்வொரு மனிதனின் மனதிலும் கண்டிப்பாக எண்ணம் இருக்கும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில், வேலை செய்வதை விட வியாபாரம் செய்வதையே பலர் விரும்புகிறார்கள். அதுதான் சரியாக இருக்கும் எனவும் நினைக்கிறார்கள். ஏனென்றால், கொரோனா வைரஸால் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை யாருக்கும் மறந்துவிட முடியாது. பல நிறுவனங்கள் பெரிய அளவில் தொழிலாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்தன. அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
தொழில் தொடங்குவதற்கு அரசு உதவி
கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். அதன் பிறகு, பெரும்பாலான மக்கள் சொந்த தொழிலை நோக்கி சென்றனர். சின்ன சின்ன வியாபாரம் செய்தாவது வாழ்க்கையை ஓட்டலாம் என முடிவு செய்தனர். சிறு தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் உதவி செய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் பலர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உதவியை நாடினார்கள். அதேநேரத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கு அரசும் மக்களை ஊக்குவிக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் உதவியுடன் குறைந்த பண முதலீட்டில் மக்கள் தங்கள் தொழிலைத் தொடங்கலாம்.
மேலும் படிக்க: வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை.. அதிக சம்பளம்.. விவரம் இதோ!
25 ஆயிரம் முதலீடு செய்து 72 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
எந்த தொழில் ஆக இருந்தாலும் அது சரியான முறையில் நடத்தினால், அது மிகவும் இலாபகரமான ஒரு தொழிலாக மாற்றலாம். இத்தகைய சூழ்நிலையில், மிகக் குறைந்த பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நிறைய சம்பாதிக்கக்கூடிய அத்தகைய தொழிலைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ஐந்து ஆண்டுகளில் 72 லட்சத்தை எளிதாக சம்பாதிக்கலாம்.
யூகலிப்டஸ் சாகுபடி ஒரு லாபகரமான தொழில்
நாம் யூகலிப்டஸ் மரம் அதாவது யூகலிப்டஸ் சாகுபடி பற்றி பேசுகிறோம். கிராமத்தில் சாகுபடி செய்வதில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே காணப்பட்டாலும், சரியான முறையில் பயிரிட்டால், நல்ல லாபம் ஈட்டலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். யூகலிப்டஸ் இந்தியா முழுவதும் பயிரிடலாம். இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், வருடம் முழுவதும் யூகலிப்டஸ் சாகுபடி செய்யலாம்.
இந்த மரத்தால் என்ன பயன் கிட்டைக்கும்?
ஒரு ஹெக்டேரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் செடிகளை நடலாம். இந்த செடிகள் 7-8 ரூபாய்க்கு எளிதில் கிடைக்கும். இந்த மரங்கள் ஆஸ்திரேலிய வம்சாவளியைச் சேர்ந்தவை. இது இந்தியாவிலும் பயிரிடப்படுகிறது. இந்த மரங்கள் கடின பலகை, கூழ், மரச்சாமான்கள், பெட்டிகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது. இது மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் பீகார் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
மேலும் படிக்க: குறைவான வட்டியில் வீட்டு கடன் வழங்கும் வங்கிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR