வட்டி விகிதங்களை அதிகரித்த யெஸ் வங்கி... 8.25% வரை வட்டியை அள்ளும் வாய்ப்பு!

FD Rates: பெரும்பாலான மக்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.  இந்நிலையில் யெஸ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது பல முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2023, 12:32 PM IST
  • யெஸ் பேங்க் FD விவரங்கள்.
  • மூத்த குடிமக்களுக்கான FD விகிதங்கள் விபரம்.
  • 3 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு கூடுதலாக 0.50% வட்டி
வட்டி விகிதங்களை அதிகரித்த யெஸ் வங்கி... 8.25% வரை வட்டியை அள்ளும் வாய்ப்பு! title=

FD Rates: பெரும்பாலான மக்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.  இந்நிலையில் யெஸ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது பல முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. யெஸ் பேங்க் குறிப்பிட்ட காலங்களுக்கான ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்களுக்கு 25 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை நிலையான வைப்பு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. மாற்றத்தைத் தொடர்ந்து, வங்கி சாதாரண குடிமக்களுக்கு 3.25% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. யெஸ் வங்கி இணையதளத்தில் உள்ள தகவல்களின் படி, மூத்த குடிமக்களுக்கு வங்கி 3.75% முதல் 8.25% வரையிலான வட்டியை வழங்குகிறது. புதுப்பிக்கப்பட்ட YES பேங்க் விகிதங்கள் நவம்பர் 21, 2023 முதல் அமலுக்கு வரும்.

சமீபத்திய யெஸ் வங்கி FD விகிதங்கள்

7 முதல் 14 நாட்களில் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு, யெஸ் பேங்க் இப்போது 3.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது; 15 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு, யெஸ் வங்கி 3.70% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஆம், 46 முதல் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு, 4.10 சதவீதமும், 91 முதல் 180 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு, 4.75 சதவீதமும் வங்கி வட்டியை செலுத்துகிறது. அதே போன்று, 121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு, 5% வழங்குகிறது மற்றும் 181 முதல் 271 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு இப்போது 6.10% வட்டி கிடைக்கும். 272 முதல் 1 வருடத்தில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.35% வட்டி கிடைக்கும். இப்போது ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.25% விகிதத்தையும், ஒரு வருடம் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 7.50% வீதம் என்ற அளவில் வட்டியை செலுத்தும். வங்கி அதிகபட்ச வட்டி விகிதத்தை 7.50% முதல் 7.75% வரை உயர்த்தியுள்ளது. 18 மாதங்களில் இருந்து 24 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளில் 25 bps அதிகரித்துள்ளது. 36 முதல் 60 மாதங்கள் வரையிலான முதிர்வு கால டெபாசிட்டுகளுக்கு 7.25% வட்டி விகிதம் கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் FD விகிதங்கள்

மூத்த குடிமக்கள் FD வட்டி விகிதம் 3.75% முதல் 8.25% வரை மாறுபடும். அதிகபட்ச வட்டி விகிதம் 8.25% 18 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. யெஸ் வங்கியின் இணையதளத்தின்படி, “மூத்த குடிமக்கள் 3 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு கூடுதலாக  0.50%  வட்டியும்,   3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கான 5 கோடிக்கும் குறைவான FD மதிப்பிற்கு 0.75% கூடுதல் வட்டி விகிதம் கிடைக்கும். இது வழக்கமான FD விகிதங்களை விட அதிகமாக உள்ளது.

யெஸ் பேங்க் FD விவரங்கள்

FD கணக்கு தொடங்க் குறைந்தபட்சத் தொகை ரூ. 10000. கணக்கு தொடங்கப்பட்டதேதி மற்றும் முதிர்வு தேதி ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு வட்டி கணக்கிடப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மாதாந்திர, காலாண்டு அல்லது முதிர்வு காலத்தில் வட்டி என அவர்களுக்கு விருப்பமான முறையில் வட்டி செலுத்துவதை தேர்வுசெய்யலாம்.

மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News