நியூடெல்லி: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு டிஜிட்டல் சேவையைத் தொடங்குகிறது, இந்த முயற்சியானது, ஓய்வூதியம் பெறுபவர்கள், தாங்கள் தான் ஓய்வூதியத்தை பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்தும் உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate for pensioner) நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியானது உயிர்வாழ் சான்றிதழை நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு பதிலாக, ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களுடன் ஓய்வூதியதாரரின் வங்கிக் கணக்கு போன்ற விவரங்களுடன் தபால்காரர் மூலம், தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஒரு சேவைக்கு 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம் 1995-ன் விதிகளின்படி, மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை பெற, ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அதாவது 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான உயிர் சான்றிதழை சமர்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 1 முதல் தொடங்கியது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: SCSS திட்டத்தில் அதிரடி மாற்றங்களை செய்த அரசு
60 முதல் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் பெறுவோர் நவம்பர் 1 முதல் 30 வரை உயிர்ச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று தான் (நவம்பர் 30 ஆம் தேதி) இறுதி நாள் ஆகும். ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பது என்பது, ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம். உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் வேலையை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம்.
வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் முறைகள்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்ற வசதி தற்போது மேலும் நீட்டிக்கப்படுகிறது, இந்த கட்டண சேவையை தபால்காரர் மற்றும் கிராமின் டாக் சேவக் மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழங்குகிறது.
மேலும் படிக்க | வெளிநாட்டுக்கு போகாமலேயே ஷாப்பிங் செய்யலாம்! குறைந்த விலையில் வெளிநாட்டுப் பொருட்கள்
ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் போர்ட்டலைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தே ஜீவன் பிரமான் போர்ட்டலில் உயிர்வாழ் சான்றிதழைச் (Digital Life Certificate Scheme) சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் தொடர்பான இணையதளத்தில் இதனைச் செய்யலாம். ஆதார் ஒழுங்குமுறை அமைப்பான UIDAI, ஓய்வூதியம் பெறுபவர்களின் அடையாளத்தை சரிபார்க்க அனைத்து பயோமெட்ரிக் சாதனங்களின் விவரங்களையும் அளித்துள்ளது.
வங்கிகள் மூலம் வீட்டில் இருந்தபடியே பெறும் சேவைகளில் உயிர்வாழ் சான்றிதழையும் பெறலாம். இதற்காக, மொபைல் ஆப், இணையதளம் அல்லது கட்டணமில்லா எண் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். பின்னர் வ்ங்கி முகவர் ஓய்வூதியதாரரின் வீட்டிற்கு வந்து உயிர்வாழ் சான்றிதழை கொடுப்பார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ