வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தினால் இவ்வளவு நன்மைகளா! தெரியாம போச்சே!

Preclosure Of Home Loan: குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டுக் கடனை ஓரளவிற்கு திரும்ப முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 12, 2023, 11:08 AM IST
  • வீட்டுக் கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்த டிப்ஸ்
  • வீட்டுக் கடன் EMI தொகையை அதிகரிப்பது நல்லதா?
  • முன்கூட்டியே கடனை அடைப்பதன் நன்மைகள்
வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தினால் இவ்வளவு நன்மைகளா! தெரியாம போச்சே! title=

வீடு வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் உண்டு. ஆனால், அதற்கான பணம் இல்லாதபோது, கடன் வாங்கி வீடு வாங்குவது இயல்பான விஷயமாகிவிட்டது. வருமானத்தை திட்டமிட்டு அதற்கேற்றாற்போல கடன் வாங்கி வீடு கட்டி, நிம்மதியாக இருப்பவர்கள் கூட, விரைவில் கடனை அடைக்க விரும்புகின்றனர். நீங்களும் அப்படி வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்த விரும்பவரா? இல்லை அதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்காதவராக இருந்தாலும், ஹோம் லோன் ப்ரீபேமெண்ட் என்பதன் நன்மைகளைத் தெரிந்துக் கொண்டால், நிச்சயம் அதை செய்ய விரும்புவீர்கள்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் சொத்துக் கனவை நிறைவேற்ற வீட்டுக் கடன்கள் எளிதாக்கியுள்ளன. குறைவான கடன், சுலபமான மாதாந்திர தவணை என கடனைத் திருப்பிச் செலுத்துவது இன்றைய காலகட்டத்தில் எளிதாக்கப்பட்டுள்ளது என்றாலும்,  வீட்டுக் கடனை, கடன் காலம் முடிவதற்கு முன்பே முன்கூட்டியே (Home Loan Prepayment) செலுத்துவதைப் பற்றி சிந்திப்பது நல்லது.

வட்டி மிச்சமாகும்

வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து தான் மாதாந்திர தவணையை செலுத்துகிறோம். நாம் மாதாந்திரம் செலுத்தும் தவணைத் தொலையில் கணிசமான பகுதி வட்டிக்காகவே செல்லும். அதிலும் குறிப்பாக கடன் வாங்கிய ஆரம்ப காலகட்டங்களில், நீண்ட கால கடனுக்கான வட்டியே பெரும்பகுதி இருக்கும்.

வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவது, முன்கூட்டியே திட்டமிட்டதைவிட, உங்கள் கடனுக்காக நீங்கள் செலுத்தும் வட்டியை சேமிக்க உதவும். எவ்வளவு சீக்கிரம் கடனை அடைக்க முடியுமோ, அவ்வளவு அதிகமாகச் சேமிக்க முடியும்.

உதாரணமாக 25 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 8% வட்டியில் ரூ.1 கோடி வீட்டுக் கடன் வாங்கிய ஒருவர் திட்டமிட்டபடி கடனைத் திருப்பிச் செலுத்தினால், அவர் செலுத்தும் மொத்தத் தொகை 2,31,50,000 ரூபாயக் இருக்கும். ஆனால், பணம் கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முன்கூட்டியே பணம் செலுத்தி 15 ஆண்டுக்குள்  வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தினால், இந்த கடன் மற்றும் வட்டிக்காக நீங்கள் செலுத்தும் தொகை 1,72,00,000 ரூபாயாக இருக்கும். அதாவது கிட்டத்தட்ட ரூ.60 லட்சம் சேமிக்கலாம்.

மேலும் படிக்க | வீட்டுக் கடனில் இருந்து விரவில் விடுபட... சில எளிய டிப்ஸ்!

பணபுழக்கம்

வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்திவிட்டால், கவலையில்லாமல் பிற செலவுகளில் கவனம் செலுத்தலாம். அதாவது, குழந்தைகளின் கல்வி, ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்வது போன்ற பிற திட்டமிடலுக்கும், வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.

கடன் பயன்பாடு
 
வீட்டுக் கடன் கிரெடிட் ஸ்கோரில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இ.எம்.ஐ (EMIs) எனப்படும் மாதாந்திர தவணை செலுத்துவதில் சிறிய தடை ஏற்பட்டாலும், அது கிரெடிட் ரிப்போர்ட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு, வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவது, கிரெடிட் அறிக்கையில் மரியாதைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

கடன்களுக்கான தகுதி அதிகரிக்கும்
 
வீட்டுக்கடன் கணிசமான அளவில் இருக்கும்போது, வாகனம், கல்வி, வணிகம், மருத்துவம் போன்ற செலவுகளுக்காக பிற கடன்களைப் பெறுவது கடினமாகிவிடும், கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தாலும் ஏற்கனவே இருக்கும் கடன்களின் அளவும் அவசரத்திற்கு புதியக் கடன் வாங்குவதை கடினமாக்கலாம். 

மன நிம்மதி

வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவதன் முக்கியமான விஷயங்களில் ஒன்று, வீடு நம்முடையது என்ற விஷயம் கொடுக்கும் நிம்மதிக்கு ஈடு இணை இல்லை. எனவே, அவ்வப்போது முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டுக் கடனை ஓரளவிற்கு திரும்ப (Partial payment) செலுத்துங்கள். தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் கிடைக்கும் போனஸ், சம்பள உயர்வு, நிலுவைத்தொகை என உபரியாக எந்த வருவாய் வந்தாலும் அதை வைத்து வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்கலாம்

மேலும் படிக்க | வீட்டுக் கடனுக்கு ரூ 9 லட்சம் மானியம்! வட்டி கிடையாது! அசல் மட்டுமே செலுத்தினால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News